பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை,
பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.மகாமண்டப
வாயிலின் இடது புறம், பிரம்மா சிவபெருமானை பூஜிக்கும் காட்சி புடைப்புச் சிற்ப வடிவில் உள்ளது. இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி,
லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மேற்குப் பிராகாரத்தில் பிள்ளையார், பாலமுருகன், கஜலட்சுமி சன்னதிகளும், வடக்குப்
பிராகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னதியும் உள்ளன.பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த
வகையில் நான்முகன் சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதுவே இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படக் காரணமானது.
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.
மகாமண்டப வாயிலின் இடது புறம், பிரம்மா சிவபெருமானை பூஜிக்கும் காட்சி புடைப்புச் சிற்ப வடிவில் உள்ளது. இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மேற்குப் பிராகாரத்தில் பிள்ளையார், பாலமுருகன், கஜலட்சுமி சன்னதிகளும்,சன்னதியும் உள்ளன.
பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த வகையில் நான்முகன் சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதுவே இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படக் காரணமானது. |