60,70,80 வயது நிரம்பியவர்கள் தங்களின் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் வைபவத்தை இங்கு நடத்துவது சிறப்பு.ஒருசமயம் சுவேதன் என்னும்
அந்தணர் அற்பாயுளில் உயிர் நீங்கும் என்பதை அறிந்து வருந்தினார். இறவாஸ்தானத்து ஈசனை வணங்கி குறை நீங்கப் பெற்றார். மார்க்கண்டேய முனிவர்
எமனை வென்று என்றும் பதினாறு என்னும் இறவா நிலையைப் பெற்றார். சாலங்காய முனிவரின் பேரன், இங்குள்ள ஈசனை வணங்கி சிவகணங்களில்
ஒருவராகும் பேறு பெற்றார். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நடமாடும்
தெய்வமான காஞ்சிப்பெரியவர் பலமுறை தரிசனத்திற்காக வந்திருக்கிறார்.சிவன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவருக்கு இறவாஸ்தானேஸ்வரர்,
மிருத்திஞ்ஜயேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. தல தீர்த்தமாக சுவேத குளம் என்னும் வெள்ளைக்குளம் உள்ளது. மகாகவி காளிதாசரால் நகரேஷு காஞ்சி
(நகரங்களில் சிறந்தது) என்று புகழப்பட்ட தலம் காஞ்சிபுரம்.
60,70,80 வயது நிரம்பியவர்கள் தங்களின் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் வைபவத்தை இங்கு நடத்துவது சிறப்பு. ஒருசமயம் சுவேதன் என்னும் அந்தணர் அற்பாயுளில் உயிர் நீங்கும் என்பதை அறிந்து வருந்தினார். இறவாஸ்தானத்து ஈசனை வணங்கி குறை நீங்கப் பெற்றார். மார்க்கண்டேய முனிவர் எமனை வென்று என்றும் பதினாறு என்னும் இறவா நிலையைப் பெற்றார்.
சாலங்காய முனிவரின் பேரன், இங்குள்ள ஈசனை வணங்கி சிவகணங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நடமாடும் தெய்வமான காஞ்சிப்பெரியவர் பலமுறை தரிசனத்திற்காக வந்திருக்கிறார். சிவன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவருக்கு இறவாஸ்தானேஸ்வரர், மிருத்திஞ்ஜயேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. |