தாமரை பீடத்தில் காட்சி தரும் சுவாமி செம்மண் லிங்கமாக இருந்தாலும், அபிஷேகம் செய்யும்போது கரையாதிருப்பது கலியுக அதிசயம். இந்த
லிங்கத்தில் ஏர்க்கால் பட்ட தடம் இருக்கிறது. லிங்கத்தின் மத்தியில் மற்றொரு லிங்கம் இருப்பதைப்போன்ற அமைப்பும் இருக்கிறது. இங்குள்ள பிரசவ
நந்தி சிறப்பு பெற்றதாகும். இங்குள்ள அம்மனின் மறுபெயர் சுகப்பிரசவநாயகி.பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர் வயலில்
உழுது கொண்டிருந்தபோது, ஏர்க்கால் ஓரிடத்தில் ஆழமாக பதிந்து நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் ஏர்க்காலை எடுக்க முடியவில்லை. அவர்
அவ்விடத்தில் தோண்டியபோது செம்மண்ணாலான லிங்கம் இருந்ததைக் கண்டார். அங்கேயே சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டார். உடை தடுத்து
கிடைக்கப்பெற்ற மூர்த்தி என்பதால் இவருக்கு, "உடையீஸ்வரர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பிகை உடையாம்பிகைக்கும் சன்னதி கட்டப்பட்டது.
தாமரை பீடத்தில் காட்சி தரும் சுவாமி செம்மண் லிங்கமாக இருந்தாலும், அபிஷேகம் செய்யும்போது கரையாதிருப்பது கலியுக அதிசயம். இந்த லிங்கத்தில் ஏர்க்கால் பட்ட தடம் இருக்கிறது. லிங்கத்தின் மத்தியில் மற்றொரு லிங்கம் இருப்பதைப்போன்ற அமைப்பும் இருக்கிறது. இங்குள்ள பிரசவ நந்தி சிறப்பு பெற்றதாகும். இங்குள்ள அம்மனின் மறுபெயர் சுகப்பிரசவநாயகி. பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர் வயலில் உழுது கொண்டிருந்தபோது, ஏர்க்கால் ஓரிடத்தில் ஆழமாக பதிந்து நின்றுவிட்டது.
எவ்வளவோ முயற்சித்தும் ஏர்க்காலை எடுக்க முடியவில்லை. அவர் அவ்விடத்தில் தோண்டியபோது செம்மண்ணாலான லிங்கம் இருந்ததைக் கண்டார். அங்கேயே சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டார். உடை தடுத்து கிடைக்கப்பெற்ற மூர்த்தி என்பதால் இவருக்கு, "உடையீஸ்வரர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பிகை உடையாம்பிகைக்கும் சன்னதி கட்டப்பட்டது. |