சிவசன்னதி எதிரில் தான் நந்தியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு தெட்சிணாமூர்த்தி எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்துள்ள அரிய காட்சியைக் காண முடியும்.
சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம்.தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இத்தலத்தில், தெட்சிணாமூர்த்தி "மேதா தெட்சிணாமூர்த்தி'என்ற திருநாமத்துடன்
அருளுகிறார். குரு பெயர்ச்சியை ஒட்டி இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.காவிரியில் நந்தீஸ்வரர் நீராடிய இடம் இப்போதும் "ரிஷப தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது.
ஆற்றின் நடுவே நந்தி கோயில் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய தீர்த்தங்களில் நீராடிய
புண்ணியம், குருக்ஷேத்ரம், பிரயாகை மற்றும் புண்ணியத்தலங்களில் தானம் செய்த பலன், பதினெட்டு புராணங்கள் படித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோயிலின் வடக்கே "ஞான புஷ்கரணி' தீர்த்தம் உள்ளது. குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் நீராடுகிறார்கள். சப்தமாதர்களில் ஒருவரான சாமுண்டி,
மகிஷனை கொன்ற தோஷம் நீங்க இத்தலத்தில் பூஜித்திருக்கிறாள்.
சிவசன்னதி எதிரில் தான் நந்தியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு தெட்சிணாமூர்த்தி எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்துள்ள அரிய காட்சியைக் காண முடியும். சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம். தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இத்தலத்தில், தெட்சிணாமூர்த்தி "மேதா தெட்சிணாமூர்த்தி'என்ற திருநாமத்துடன் அருளுகிறார்.
குரு பெயர்ச்சியை ஒட்டி இங்கு சிறப்பு பூஜை நடக்கும். காவிரியில் நந்தீஸ்வரர் நீராடிய இடம் இப்போதும் "ரிஷப தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்தி கோயில் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, புண்ணியம், குருக்ஷேத்ரம், பிரயாகை மற்றும் புண்ணியத்தலங்களில் தானம் செய்த பலன், பதினெட்டு புராணங்கள் படித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோயிலின் வடக்கே "ஞான புஷ்கரணி' தீர்த்தம் உள்ளது. குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் நீராடுகிறார்கள். சப்தமாதர்களில் ஒருவரான சாமுண்டி, மகிஷனை கொன்ற தோஷம் நீங்க இத்தலத்தில் பூஜித்திருக்கிறாள். |