|
|||||
சோள தோசை |
|||||
தேவையானவை 1. சோளம், புழுங்கலரிசி - தலா ஒரு கப் 2. உளுத்தம் பருப்பு - அரை கப் 3. காய்ந்த மிளகாய் - 3 4. சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன் 5. கறிவேப்பிலை - சிறிதளவு 6. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை 1. சோளத்தில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, மிக்ஸி விப்பரில் ஒன்றிரண்டு முறை சுற்றி எடுத்து தண்ணீரில் கழுவினால் தோல் நீங்கிவிடும்.
2. தோல் நீங்கிய சோளத்துடன் புழுங்கலரிசியைச் சேர்த்தும், உளுத்தம்பருப்பை தனியாகவும் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. சோளம், அரிசி ஊறியவுடன் சுத்தம் செய்து, அதில் கொத்துமல்லி, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும்.
4. உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும்.
5. அரைத்த மாவுகளை ஒன்றாக கலந்து 3 மணி நேரம் புளிக்க வைத்து, தோசைக்கல்லில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு தோசைகளாகச் சுட்டு எடுக்கவும். |
|||||
by Swathi on 16 Jul 2014 0 Comments | |||||
Tags: Corn Dosa Sola Dosai சோள தோசை | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|