தேவையானவை :
1. வரகரிசி - அரை கப்
2. தக்காளி - 2 (அரைத்தது)
3. வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
4. இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
5. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
6. மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
7. கொத்தமல்லி - சிறிதளவு
8. உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு :
1. கடுகு - 1/4 டீஸ்பூன்
2. பட்டை - 1 இன்ச்
3. கிராம்பு - 1
4. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் வரகரிசியை அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
2. பின்னர், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். இவற்றுடன் தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
3. பின்னர், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வரகரிசி, உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக விட்டு இறக்கினால் சுவையான சத்தான வரகரிசி தக்காளி சாதம் ரெடி...
|