ராமருக்குரிய சிறப்பான கோயில்களில் இதுவும் ஒன்று. சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். ராமானுஜர் தீட்சை பெற்ற தலம். ராமர் கோயிலுக்குப் பின்புறம் ஒரு ஏரி உள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு ஏரி அடிக்கடி நிறைந்து கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்பிற்கு ள்ளாகினர். அப்போது, லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்தார்.
ஏரிக்கரையை பலப்படுத்த அவர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஒருசமயம் அவர் இக்கோயி லுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர்.அவர்""உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், அவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் அப்பணியை செய்து தருகிறேன்,'' என்றார்.
மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த பிளேஸ், ராம லட்சுமணரே இளைஞர்களாக வந்ததை அறிந்தார். |