இங்குள்ள நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளவர் என்பது தலத்தின் சிறப்பு.தீராத நோய் உள்ளவர்கள், இங்கு 11 நாட்கள் தங்கி,
கிருஷ்ணாநதியில் நீராடி ஒரு தடவைக்கு 32 முறை வீதம், அதிகாலை, மதியபூஜை, மாலை வேளையில் கோயிலை வலம் வந்தால் நோய் தீரும்
என்பது நம்பிக்கை.கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள இந்தக் கோயிலில் பக்தர்கள் நீராட படித்துறை உள்ளது. இந்த படித்துறை எல்கைக்குள் மட்டுமே
பக்தர்கள் நீராட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஆழமான பகுதி என்பதால் முதலைகள் வசிப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஏழு ஆழ்வார்கள் மேற்காகவும், நால்வர் கிழக்காகவும் உள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒன்று இருளில் மறைந்திருக்கலாம் என தெரிகிறது.
கருவறை முன்புள்ள முக்தி மண்டபத்தில் 21 தூண்கள் உள்ளன. நரசிம்மர் முன் கருடனே காட்சி அளிப்பார். இங்கு கருடனுடன் ஆஞ்சநேயரும்
இணைந்து கருவறையை வணங்குவது போன்ற சந்நிதி உள்ளது. அழகான ஊஞ்சல் மண்டபமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முக்தி மண்டபத்தின்
இடப்பகுதியில் கோதாதேவி சந்நிதி, பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆசார்யலு சந்நிதி ஆகியவை உள்ளன.
இங்குள்ள நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளவர் என்பது தலத்தின் சிறப்பு. தீராத நோய் உள்ளவர்கள், இங்கு 11 நாட்கள் தங்கி, கிருஷ்ணாநதியில் நீராடி ஒரு தடவைக்கு 32 முறை வீதம், அதிகாலை, மதியபூஜை, மாலை வேளையில் கோயிலை வலம் வந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள இந்தக் கோயிலில் பக்தர்கள் நீராட படித்துறை உள்ளது.
இந்த படித்துறை எல்கைக்குள் மட்டுமே பக்தர்கள் நீராட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஆழமான பகுதி என்பதால் முதலைகள் வசிப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.ஏழு ஆழ்வார்கள் மேற்காகவும், நால்வர் கிழக்காகவும் உள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒன்று இருளில் மறைந்திருக்கலாம் என தெரிகிறது. கருவறை முன்புள்ள முக்தி மண்டபத்தில் 21 தூண்கள் உள்ளன.
நரசிம்மர் முன் கருடனே காட்சி அளிப்பார். இங்கு கருடனுடன் ஆஞ்சநேயரும் இணைந்து கருவறையை வணங்குவது போன்ற சந்நிதி உள்ளது. அழகான ஊஞ்சல் மண்டபமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முக்தி மண்டபத்தின் இடப்பகுதியில் கோதாதேவி சந்நிதி, பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆசார்யலு சந்நிதி ஆகியவை உள்ளன. |