இங்குள்ள நரசிம்மர் உயிரோட்டத்துடன் இருப்பதாகவும், அவர் விடும் மூச்சுக்காற்றில் ஒரு தீபம் அசைவதாகவும், மற்றொன்று அசையாமல்
இருப்பதாகவும் உள்ளது என்பது இத்தலத்தின் சிறப்பு.இரண்யனை வதம் செய்த கையோடு, உக்ரம் தணியும் முன், அவர் இங்கு வந்திருக்கவேண்டும்,
அதனால் தான் பெருமூச்சு வெளிப்படுகிறது என்று ஊகித்தார். நீண்டகாலத்துக்குப் பிறகு மன்னர்களுக்கு இந்த நரசிம்மரின் வரலாறு தெரிய வந்தது.
அவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இதன் பிறகு கோயில் சிதிலமடைந்து, சிலையும் புதைந்து போனது. நான்காம் நூற்றாண்டில் மீண்டும்
இந்தக் கோயில் பற்றிய விபரம் வெளியே தெரிய வந்தது. ரெட்டி ராசுலு என்பவர் இப்பகுதியில் ஒரு நகரத்தை உருவாக்கினார். இதற்காக, ஆங்காங்கே
குழிகள் தோண்டிய போது, உள்ளிருந்த விக்ரகம் வெளிப்பட்டது. கி.பி.1377ல், இங்கு அவர் ஒரு கோயிலைக் கட்டி, அதில் நரசிம்மரை பிரதிஷ்டை
செய்தார். அப்போதும், நரசிம்மரிடமிருந்து மூச்சு வெளிப்படுவதை அறிந்த அர்ச்சகர், இதைச் சோதிப்பதற்காக மூக்கின் அருகில் ஒரு விளக்கை ஏற்றி
வைத்தார். நரசிம்மரின் மூச்சுக்காற்றில் தீபம் அசைந்தது. அதேநேரம், அவரது பாதம் அருகில் ஏற்றி வைத்த தீபம் நிலையாக எரிந்தது. இப்போதும்,
இந்த விளக்குகள் இவ்வாறு எரியும் அதிசயத்தைக் காணலாம்.
இங்குள்ள நரசிம்மர் உயிரோட்டத்துடன் இருப்பதாகவும், அவர் விடும் மூச்சுக்காற்றில் ஒரு தீபம் அசைவதாகவும், மற்றொன்று அசையாமல் இருப்பதாகவும் உள்ளது என்பது இத்தலத்தின் சிறப்பு. இரண்யனை வதம் செய்த கையோடு, உக்ரம் தணியும் முன், அவர் இங்கு வந்திருக்கவேண்டும், அதனால் தான் பெருமூச்சு வெளிப்படுகிறது என்று ஊகித்தார். நீண்டகாலத்துக்குப் பிறகு மன்னர்களுக்கு இந்த நரசிம்மரின் வரலாறு தெரிய வந்தது.
அவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இதன் பிறகு கோயில் சிதிலமடைந்து, சிலையும் புதைந்து போனது. நான்காம் நூற்றாண்டில் மீண்டும் இந்தக் கோயில் பற்றிய விபரம் வெளியே தெரிய வந்தது. ரெட்டி ராசுலு என்பவர் இப்பகுதியில் ஒரு நகரத்தை உருவாக்கினார். இதற்காக, ஆங்காங்கே குழிகள் தோண்டிய போது, உள்ளிருந்த விக்ரகம் வெளிப்பட்டது. கி.பி.1377ல், இங்கு அவர் ஒரு கோயிலைக் கட்டி, அதில் நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார்.
அப்போதும், நரசிம்மரிடமிருந்து மூச்சு வெளிப்படுவதை அறிந்த அர்ச்சகர், இதைச் சோதிப்பதற்காக மூக்கின் அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். நரசிம்மரின் மூச்சுக்காற்றில் தீபம் அசைந்தது. அதேநேரம், அவரது பாதம் அருகில் ஏற்றி வைத்த தீபம் நிலையாக எரிந்தது. இப்போதும், இந்த விளக்குகள் இவ்வாறு எரியும் அதிசயத்தைக் காணலாம். |