இந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது. மார்கழி மாதம் பழங்கள், காய்கறிகள், வெட்டிவேர், 108 திரவியங்கள், மூலிகைகள், பூக்கள் மூலம் அமைக்கப்பட்ட பந்தலில் கூடாரவல்லி திருவிழா நடக்கிறது. கூடாரத்தில், ஆண்டாள் நாச்சியார் சேவை சாதிக்கிறாள். அன்று திருப்பாவை பாடப்படும்.
திருமணத்தடை நிவர்த்தி, கல்வி, செல்வம், வியாபாரஅபிவிருத்திக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது. பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,வந்து வரம் தருவார் வரதராஜன் என்று பக்தர்கள் நம்புகின்றனர். பேசும் பெருமாளின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, தாமரை மலர் கொண்ட திருக்கையுடைய கோலத்தில் உள்ளனர்.
பேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்காக, முதல்நாள் என்ன கிழமையில் செல்கிறோமோ, அதே கிழமையில் ஒன்பது வாரம் குழந்தையுடன் கோயிலுக்கு செல்ல வேண்டும். தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு ஒன்பது முறை கோயிலை வலம் வரவேண்டும். குழந்தையின் முகத்தில் சங்கு தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. |