"வைகுண்டவாசர்' என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை.வைகுண்ட பெருமாள் கையில் பிரயோக சக்கரம் வைத்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். அருகில் மார்க்கண்டேயர் தவம் செய்தபடி இருக்கிறார். திருமணச்சீராக அவர் கொண்டு வந்த மோதிரம் வலது கையில் இருக்கிறது.
சுவாமி நேரடியாக வைகுண்டத்தில் இருந்து வந்து, "வைகுண்டவாசர்' என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை. ஏகாதசியன்று சுவாமி, கருட வாகனத்தில் வலம் வருகிறார்.சுவாமி எதிரே கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவரது இறகுகள் மூடிய நிலையில் இருக்கிறது. பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவாரபாலர்களாக இருப்பர்.
இங்கோ அவிரட்சகன், அக்னி என்பவர்கள் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். மாமரம் இத்தலத்தின் விருட்சம். திருக்கச்சிநம்பி, நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் விஷ்வக்சேனர் சிலைகளும் உள்ளன. |