LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்-14, முனைவர் இர. பிரபாகரன் , மேரிலாந்து , வட அமெரிக்கா

முனைவர் பிரபாகரன் தமிழ் நாட்டில் மன்னார்குடியில் பிறந்தவர். இவர் தமிழ் நாட்டில்  கணிதத்துறையில் B.Sc, M.Sc ஆகிய பட்டங்கள் பெற்றார். சில ஆண்டுகள், தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியபின், இவர் அமெரிக்காவில் கணினித்துறையில் M.S, Ph.D. மற்றும் MBA பட்டமும் பெற்றார். இவர் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களின் மூலம், NASA, US Army ஆகிய நிறுவனங்களிலும் உயர்ந்த பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

முனைவர் பிரபாகரன் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழரின் நலம் ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு உடையவர். இவர் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறுக்கட்டளையின் செயலராகவும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் துணைத்தலைவராகவும் பணிபுரிந்து, அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றியவர்.

வாசிங்டன் வட்டாரத்தில் 2003 – ஆம் ஆண்டு, தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம் என்ற அமைப்பை நிறுவி, அதன் சார்பாகக் கடந்த பல ஆண்டுகளாகத் திருக்குறள், புறநானூறு, தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம், குறுந்தொகை, நாலடியார், முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, ஆகிய நூல்களைத் தானும் கற்று, நண்பர்களுக்கும் இவர் அவற்றைக் கற்பித்தார்.  இவர் தொடங்கிய அந்த அமைப்பு, அமெரிக்காவில், பல ஊர்களில் தமிழர்கள் கூடித் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் ஆகியவற்றைப் படிப்பதற்கு முன்மாதிரியாக இருந்துவருகிறது.

      மேலைநாடுகளில் முதன்முறையாக நடத்தப்பட்ட பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு, உலகின் முதல் பன்னாட்டுப் புறநானூறு மாநாடு, உலகின் முதல் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகிய மாநாடுகளுக்கு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று, அவற்றை மிகவும் வெற்றிகரமாக முனைவர் பிரபாகரன் நடத்தியுள்ளார். இவர் 2005 – ஆம் ஆண்டு, அமெரிக்காவில், பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடந்தபொழுது, அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவினார். 2010 – ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு, “வள்ளுவர் பார்வையில் புறநானூற்று இறைமாட்சி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கினார். இவர் புறநானூறு, குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களுக்குத் தன்னுடைய எளிய விளக்கவுரைகளை வலைத்தளத்தில் பதிவு செயதது மட்டுமல்லாமல், அவற்றை மூன்று நூல்களாகவும் (புறநானூறு – மூலமும் எளிய உரையும், பகுதி 1, (புறநானூறு – மூலமும் எளிய உரையும், பகுதி 2, குறுந்தொகை) வெளியிட்டிருக்கிறார். இவர் 2019 – ஆம் ஆண்டு, The Ageless Wisdom (As embodied in Thirukkural) என்று ஆங்கிலத்தில், திருக்குறளைப் பற்றி ஒரு விரிவான நூlல் வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்த தலைப்புகளில் பல கருத்தரங்கங்களை முனைவர் பிரபாகரன் நடத்தியுள்ளார். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பல ஊர்களுக்குச் சென்று புறநானூறு மற்றும் திருக்குறள் சார்ந்த தலைப்புகளில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

2019 – ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒரு அமர்வுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் நாட்டில் உள்ள, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம் என்ற அமைப்பின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளரகப் பணியாற்றிவருகிறார்.

கடந்த ஓராண்டு காலமாக, அமெரிக்கத் தமிழ் வானொலியில் “திருக்குறள் சிந்தனைகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிவருகிறார். இந்தச் சொற்பொழிவுகளை வலையொளியில் (வலையொளி – YouTube) காணலாம்.. மேலும், மாதம்தோறும், “புறநானூற்றுப் பூங்காவிலிருந்து சில பூக்கள்” என்ற தலைப்பில், புறநானூற்றில் உள்ள கருத்துக்களைத் தொகுத்துத் தொடர்ச் சொற்பொழிவாற்றிவருகிறார். இந்தச் சொற்பொழிவுகளை வலையொளியில் காணலாம்.

 இவருடைய வலைத்தளத்தில் உள்ள திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் “புதிய பார்வையில் திருக்குறள்” என்ற நூல் வடிவத்தில் வெளிவந்துள்ளது..

இப்பொழுது, அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முனைவர் பிரபாகரன் திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை மேலை நாடுகளில் பரப்புவதைத் தன் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டவர்.

Dr. Prabhakaran’s Books and Blogs

Books Published

புறநானூறு முலமும் எளிய உரையும் பகுதி 1 (2012)

புறநானூறு முலமும் எளிய உரையும் பகுதி 2 (2013)

குறுந்தொகைமூலமும் எளிய உரையும் (2017)

 

Kaavya Publishing

16, Second Cross Street

Trustpuram, Kodambakkam, Chennai, Tamil Nadu 600 024

Phones: 044- 23726882;  9840480232

 

            The Ageless Wisdom (As embodied in Thirukkural) (2019)

புதிய பார்வையில் திருக்குறள் (2022)                                                                          

Emerald Publishers

15A, I Floor, CASA Major Rd

Egmore, Chennai, Tamil Nadu 600 008, India

Phone+91 98406 96574 

Books Edited

            வள்ளுவர் முப்பால்புதிய பார்வைகள்

            துணைப் பதிப்பாசிரியர்

            ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை - 2006

 

Dr. Prabhakaran’s blogs:

Dr. Prabhakaran has actively promoted classical Tamil Literature through his blogs, books, and lectures for more than 20 years. His blogs on Thirukkural, Puranaanuuru, Kurunthokai, Mullaippaattu, Kurinjippaattu are being regularly read by thousands of people in the Tamil diaspora. For example, his blogs on Puranaanuuru have been visited and read by more than 400,000 readers in the USA, Canada, India, Malaysia, Singapore, Sri Lanka, Russia, the United Kingdom, and several other countries. His Kurunthokai blog has been visited by more than 200,000 readers in many countries. The links for his blogs are as follows:

 

https://amazingkural.blogspot.com               (Essays on Thirukkural in English)

https://thirukkuralkatturaikal.blogspot.com (Essays on Thirukkural in Tamil)

https://SASQ21.blogspots.com                                 (Thirukkural in Q&A format)            https://puram1to69.blogspot.com                 (Commentaries on Puranaanuuru poems 1 -69)

https://puram400.blogspot.com                     (Commentaries on Puranaanuuru poems 70- 400)

https://nallakurunthokai.blogspot.com          (Commentaries on 402 poems of Krunthokai)

https://mullaippaattu.blogspot.com               (Commentaries on Mullaippaattu)

https://kurinjippaattu.blogspot.com               (Commentaries on Kurinjippaattu) 

https://nedunalvaadai2021.blogspot.com       (Commentaries on Nedunalvaadai)               

by Swathi   on 21 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.