|
||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் |
||||||||
பெயர்: ஷீலா ரமணன் பிறப்பிடம்: சென்னை வசிப்பிடம்: சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் பணி: தினமலர் நாளிதழில் அயலக செய்தியாளர் மின்னஞ்சல்: 2002sheela@gmail.com தொடர்ச்சியாக கவிதைகள், கதைகள் மற்றும் பயணக் கட்டுரைகள் எழுதி வரும் ஷீலா இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். “வெற்றி உனதே எழுந்து வா“, “அம்மா உன்னை எண்ணி ஏங்குகிறேன்“ எனும் அந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை மணிமேகலை பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. அக்கதைகளில் ஒன்று வாஷிங்டன் தமிழ் பல்கலைக்கழகத்தின் 'அறிவொளி விருது' பெற்றுள்ளது. தினமலர் நாளேட்டின் அயலக செய்தியாளர், சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின்(SATS) நிர்வாக உறுப்பினர் என பல தளங்களில் பயணிக்கும் இவர் ‘மல்லிகை மலர்’ இதழின் முதன்மை ஆசிரியராகவும் இருக்கிறார். காட்சி ஊடகத்திலும் ஆர்வம் கொண்ட இவர் TET-Tamil Entertainment Television- கனடா தொலைக்காட்சியில் 'மனம் திறந்து' எனும் நிகழ்வை (50) தொகுத்து வழங்கியிருக்கிறார். தற்போது அரசன் ரேடியோ-நியூசிலாந்தில் வானொலி அறிவிப்பாளராக தொடர்கிறார்.
|
||||||||
by Swathi on 10 Mar 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|