LOGO
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

ஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்?


ரத்த அழுத்தம்
உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்துச் சாப்பிடும் போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக ரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இந்தப் பிரச்சினை எதிர்கொண்டிருப்பார்கள். ஊறுகையில் இருக்கும் உப்பின் அளவும் அதிகம் என்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

புற்றுநோய்

கடைகளில் பெருமளவில் தயாரிக்கப்படும் ஊறுகாயில் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.

சிறுநீரகப் பாதிப்பு

ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதால், சிறுநீரகத்தின் வேலைப் பளு அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


வயிற்றுப்புண்

அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்கவிளைவாக வயிற்றுப் புண் ஏற்படக்கூடும். அப்போதும் தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால், மேலும் தீவிரமான பாதிப்புகள் உண்டாகலாம். 


மன அழுத்தம்

ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு கோபம், மன அழுத்தம் ஆகியவை அதிகமாக ஏற்படும்.



தொற்று நோய்

ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய்த் தொற்று ஏற்படக்கூடும். 

ஊறுகாய் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்காக அதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உப்பு, காரம்தான் மேற்கண்ட பிரச்சினைகளுக்குக் காரணம். கடைகளில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளிலும் இதே பிரச்சினை உள்ளது.

ஊறுகாயை எப்போதாவது ‘தொட்டுக் கொள்ள’ மட்டும் செய்தால் மேற் கண்ட பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம்!

குறிப்பு:

கடைகளில் உறுகாய் வாங்குவதை தவிர்த்து வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.

Are Pickles Healthy to Eat ?

Blood Pressure :

Pickles are high in sodium and eating a high-sodium diet is strongly associated with risk for developing high blood pressure.You can still enjoy pickles, but limit your serving sizes, or choose low-sodium varieties.

Cancer : 

A study conducted in southern India, among people with same dietary patterns and socio economic background, has shown that the consumption of pickled vegetables increases the risk of developing gastric cancer.

Kidney :

However, eating large amount of pickles increased kidney workload.

Ulcer :

Eating too much of pickles causes ulcer.

Mental Stress :

The consumption of fermented foods that contain probiotics may serve as a low-risk intervention for reducing social anxiety. 

Infectious Disease :

Body needs special care, not only in the form of extra rest but also in the foods you eat. Choosing foods carefully can help you to feel better faster, and is crucial.

Table salt is used as a preservative. Unlike Himalayan or sea salt, which has natural salt and numerous beneficial minerals, refined salt has been chemically stripped of minerals and dried above 1,200 degrees Fahrenheit. The processed salt is not pure sodium chloride but is actually only 97.5 percent sodium chloride. The remaining 2.5 percent of refined salt is made up of anti-caking and flow agents. Often, such agents include dangerous chemicals like ferrocyanide and aluminosilicate.Calcium chloride, Sodium Benzoate Is a preservative which has been linked to cancer. Finally eating preservative foods like pickles causes Infectious Disease. 

by Swathi   on 30 Nov 2016  0 Comments
Tags: Oorugai   Oorugai Benefits   Why Avoid Pickle   Pickle Sideeffects   ஊறுகாய் பக்கவிளைவுகள்   ஊறுகாய்     
 தொடர்புடையவை-Related Articles
ஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்? ஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்?
இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய்
மஞ்சள் ஊறுகாய் மஞ்சள் ஊறுகாய்
வெந்தய மாங்காய் வெந்தய மாங்காய்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.