நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கா, லிங்கோத்பவர் உள்ளனர். பிரகாரத்தில் கணபதி லிங்கம்
இருக்கிறது.திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர்.அமுத பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த
சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார்.
அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார்.இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம்.
அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது.
மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.இக்கோயிலில் மற்றொரு வித்தியாசமான அம்சம்
நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று, சுவாமி அம்பாள் திருமணக்காட்சியைக் காண்பதாகும்.கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின்
பாதுகாப்பிற்காக சூகாடு கிழாள்' என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள்.
நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கா, லிங்கோத்பவர் உள்ளனர். பிரகாரத்தில் கணபதி லிங்கம் இருக்கிறது. திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுத பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது.
அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார். இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம். அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது. மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.
இக்கோயிலில் மற்றொரு வித்தியாசமான அம்சம் நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று, சுவாமி அம்பாள் திருமணக்காட்சியைக் காண்பதாகும். கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக சூகாடு கிழாள்' என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள். |