இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகி இருக்கச் சொன்ன தலம்.இத்தலத்தின் தல விருட்சம்
புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது.மிகவும் பழமையான கோயில் இது. இராஜேந்திர சோழன் காலத்தில் கோயில்
திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது.போட்டி வரும்போது பூலோகத்தில் ஒரு
தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில் சிறந்தவள் என்று
ஒப்புக்கொள்கிறேன் என்று சுவாமி சொல்ல அதற்கு அம்பாள் சம்மதிக்கிறாள். அதுபடி சுவாமி தர்ப்பையை கீழே போட அது வந்து விழுந்து பஞ்சலிங்கமாக
ஆகிவிடுகிறது. அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது. அதன் மகிமை என்னவென்றால் திருமண வரம், நாகதோச நிவர்த்தி இவைகளைத் தரக்கூடியதாக
பக்தர்களால் வணங்கப்படுகிறது.குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம்.நந்தனாருக்காக அவர் சிவபெருமானை தரிசிக்கும் முன் குளித்து விட்டு
வர வசதியாக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகி இருக்கச் சொன்ன தலம். இத்தலத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது. மிகவும் பழமையான கோயில் இது. இராஜேந்திர சோழன் காலத்தில் கோயில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில். சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது.
போட்டி வரும்போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில் சிறந்தவள் என்று ஒப்புக்கொள்கிறேன் என்று சுவாமி சொல்ல அதற்கு அம்பாள் சம்மதிக்கிறாள். அதுபடி சுவாமி தர்ப்பையை கீழே போட அது வந்து விழுந்து பஞ்சலிங்கமாக ஆகிவிடுகிறது. அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது.
அதன் மகிமை என்னவென்றால் திருமண வரம், நாகதோச நிவர்த்தி இவைகளைத் தரக்கூடியதாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம். நந்தனாருக்காக அவர் சிவபெருமானை தரிசிக்கும் முன் குளித்து விட்டு வர வசதியாக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு. |