தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் இத்தலத்தின் சிறப்பு. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில் களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தி யின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள்.
தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங் கள் உள்ளன.
இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடி யில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இன்று வரையிலும் இப் பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து சுப காரியங் களுக்கும் முன்பு கோவையின் அரசியாக திகழும் கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்பே தொடங்குகின்றனர் |