இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில் ஒர் சமயம் பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்பாளை வணங்கி தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு அத்தீர்த்தத்தை பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை குணமான அதிசயம் நிகழ்ந்தது.
மற்றொரு கருத்தின் படி "தண்டு' என்றால் "படை வீரர்கள் தங்கும் கூடாரம்' எனப்பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் "தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர். அனைத்து மதத்தினரும் வழிபடும் தெய்வமாக திகழும் தண்டுமாரியம்மன் கோவை நகரின் காவல் தெய்வமாக இருந்து நகரின் இரு கண்களில் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறாள். |