LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு..

மழையோடும் வெயிலோடும்
போராடக் கற்றுத்தந்த கூரையது;
உழைத்து உழைத்து வந்தபணத்தில்
பெருமையோடு வாழ்ந்த வாழ்க்கையது,

வறுமையிலும் சிரிப்போடு வாழ்ந்தநாட்களை
பழையக்கஞ்சோடு பருகிய காலமது;
மாமனும் அத்தையும் பேசி சிரித்ததையெல்லாம்
கதையோடு முடிந்துக்கொண்ட ஓலைகளின் கூடு அது,

கனவுகளைப்பற்றி யெல்லாம் கவலையில்லா
மனிதர்களின் மனதுள் வாழ்ந்த வீடு அது;
இன்றைய லட்சியக் கனவினை – அன்றுவெறும்
கோபுரங்களுள் விட்டுச்சென்ற சிற்பிகளின் சாலையது..

ஏருழுது மரம்வெட்டி வீடுவைத்த வியர்வையில்கூட
பாட்டுகளை நனைத்துக் கட்டிய ஒய்யாரப் பொழுது அது;
விடிவெள்ளி நிலவுகாட்டி மடியிலுறங்கும் குழந்தைக்கு
தாய் நம்பிக்கையையும் சேர்த்தூட்டிய வளர்ப்பு அது,

மரணமென்றால் கூடியழ தளர்ந்துவிழுந்தால்
தாங்கிப்பிடிக்க உறவுகள் சேர்ந்திருந்த மாளிகையது;
மழைவந்தால் வீடொழுக, வீடொழுவ தாயழுக
தாயோடுப் பிள்ளைகளும் சொந்தமும் கூடியழுதவேளையது,
 
சோறாக்கி சொக்குபொடி சேர்த்துருட்டி செல்வியவ கொடுத்ததுல
அச்சோ அச்சச்சோ'வென மனஞ் செவந்த நாட்களது;
சொத்தெல்லாம் சொந்தமாக, சொத்தெல்லாம் வீடாக
சொத்தெல்லாம் அன்பென்றேவாழ்ந்த ஈரமனக்கூடு அது;
 
சிம்னி விளக்குதுடைத்து சன்ன ஒளியேற்றி
மின்னும் பொன்னெழுத்தாய், மரபுசொல்லும்
ஆத்திச்சூடியையும் கண்ணன் வாய்ப்பாடையும்
மாறி மாறி மனனம் செய்தப் பருவமது,

சாணி மெழுகி செம்மண் பூசி, கட்டாந்தரையும்
பூசியச் சுவரும் மழையிலூறிப் போனாலும்'
மனதில் தீரம்தீரா மனிதர்களின்
பிழைப்பு நடந்தச் சாட்சியது,

இனி காலம் மாறி, கட்டிடம் ஏறி
வாழ்வு எதுவாக ஆனாலும்; நினைவில் நீங்கா அதுவாகவே
அமர்ந்திருக்கும் அழியாக் கூடு அது; நம்
அறிவொழுகிய வீடு அது!!

by Swathi   on 04 Jun 2015  1 Comments
Tags: Veedu   Veedu Kavithai   Ninaivu Kavithai   Vidhyasaagar   Vidhyasaagar Kavithai   வீடு   நினைவு  
 தொடர்புடையவை-Related Articles
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-20-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-20-11-2015
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர் என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர்
மரணத்தை விழுங்கும் ரகசியம்.. மரணத்தை விழுங்கும் ரகசியம்..
அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு.. அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு..
உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.. உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..
அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர் அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர்
நினைவு நாள் நினைவு நாள்
கருத்துகள்
21-Jun-2015 05:23:26 ந.ஜெயபாலன், said : Report Abuse
மலரும் நினைவுகளை ,மந்திர சொற்களில் தந்திருக்கும் கவிதை இது. உருகிப் போனேன் அத நாளையென் நினைவுகளில்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.