LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் (Tamil Baby Name )

தமிழ்ப்பெயர் சூட்டும்போது பிறமொழிச்சொற்களை அறிய

தமிழ்ப்பெயர் சூட்டுவோம் - பிறமொழிச்சொல் என அறிய ....

குழந்தைகளுக்கு/ இல்லங்களுக்கு/ நிறுவனங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டுங்கள்!  பிறமொழிச்சொல் என அறிய ....

1. ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ முதலிய

கிரந்த எழுத்துகள் வரின் பிற மொழிச் சொல் என ஒதுக்குக.

2.தமிழில் ஒற்றெழுத்துகள் சொல் முதலில் வரக்கூடாதவை. அவை தமிழ்ப்பெயர்கள் அல்ல.

ஒற்றெழுத்துகள் : மெய்யெழுத்துகள்... க்.....ன்.

X க்ரியா
X ப்ரியா
X ட்ரூமென்
x த்ரிஷா
X ந்த்ரா

3. உயிர்மெய் எழுத்துகளில் மொழிக்கு (சொல்லுக்கு) முதலில் வரக்கூடாத ட, ண, ர, ல,ழ,ள, ற,ன வரிசையில் வருவன முதல் எழுத்தாக வந்தால் அச்சொற்கள் தமிழ் அல்ல.


இவ்வெழுத்துகளில் தொடங்கும் பெயர்கள் தமிழில்லை.

எ.கா.:
x டார்ஜான்
x டில்லிபாபு,
X லட்சுமி,
x லாவன்யா
X லேசு.
x ரம்யா,
x  ராக்கி, 
X ரோசி

4. ச கர வரிசை எழுத்துகளில்
சங்கம், சங்கு, சடை, சமர், சாமை, சிலை, சீலை, ,செரு, சேர், சொல், சோறு எனும் தமிழ்ச் சொற்கள் இருப்பினும், பிறமொழிச்சொற்கள் பல புகுந்துள்ளன.


எ.கா.:
x சண்முகம்,
X சந்திரா,
x சாவித்திரி,
X சீத்தா / சீதா,
x சுப்பிரமணியன்,
x சுந்தரம்,
x செமினி,
X சேது.

 

5. சகர மெய் ஐ, ஒள என்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் சை, சௌ எனும் உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் அறவே தமிழில்லை.

x சைமினி,
x சைமன்
X செளமியன்
X சௌந்தர்யா.

 

 

6. ய கர வரிசை எழுத்துகளில் *யா என்ற நெடில் மட்டுமே சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும். பிற ய கர வரிசை எழுத்துகளில் ஒரு சொல் தொடங்கினால் அது தமிழ் இல்லை.

எ.கா.:
x யவனி,
X யவனராணி
X யுகன்,
X யூகி,
X யோகம்
X யோகிசுவரன்.

7.சொல்லின் இறுதியில் க்ச்ட்த்ப்ற் என வல்லின மெய் 6, ங், ஞ், ந், வ், ....... 4 என்னும் பத்து எழுத்துகளும் வரக்கூடாது. இவை இறுதியாக வரின் தமிழ்ச் சொல் அல்ல.

x விவேக்
x சரச்
x பட்
x ரஞ்சித்
x அரிகந்
X பிரதாப்
x பீம்சிங்
X அபிநவ்

பேராசிரியர் முனைவர்.தஞ்சை பா.இறையரசன் 

தமிழ் எழுச்சிப் பேரவை

கருத்துரை அறிஞர் குழு - உலகத் தமிழ்ப்பெயர்கள் இயக்கம்

by Swathi   on 01 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம். தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம்.
வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது? வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது?
பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு
தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்.. தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்..
தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்
தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது.. தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது..
தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd  நிறுவனத்தை வாழ்த்துவோம்.. தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd நிறுவனத்தை வாழ்த்துவோம்..
உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.