LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -21 , வி. கிரேஸ் பிரதிபா,அட்லாண்டா  (ஜியார்ஜியா), வட அமெரிக்கா

பெயர்             : வி. கிரேஸ் பிரதிபா
பிறந்த ஊர்     : மதுரை
வசிக்கும் ஊர் : அட்லாண்டா (ஜியார்ஜியா), வட அமெரிக்கா
பணி               : மென்பொருள் பொறியாளர்

2008-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுதிவரும் கவிஞர் கிரேஸ் பிரதிபா தனது ‘தேன்மதுரத்தமிழ் கிரேஸ்’ எனும் பெயரால் வலைத்தள வட்டத்தில் பரவலாக அறியப்படுகிறார்.  அடிப்படையில் கவிதைகளில் ஆர்வம் கொண்ட இவர் திருக்குறள், சங்க இலக்கியப் பாடல்களின் மொழியாக்கத்தைத் தனது தமிழ், ஆங்கிலத் தளங்களில் பதிவிடுகிறார். அவற்றை வளையொளிகளில் பதிவேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருகிறார்.

கவிஞர், பேச்சாளர், வல்லினச் சிறகுகள் மின்னிதழிலில் ஆசிரியர் என்ற பன்முகத் தன்மை கொண்ட இவருடைய படைப்புகள்  தினமணி, கணையாழி, கொக்கரக்கோ, வல்லமை என பல இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. 

தனது எழுத்தினால் எங்கேனும் ஒரு நேர்மறை மாற்றம் ஏற்பட்டால் அதுவே தனக்கு மிகப்பெரிய வெற்றி எனக் கருதும் கிரேஸ் இதுவரை நான்கு நூல்கள் எழுதியிருக்கிறார். கிரேஸ் பல விருதுகளாலும் பாராட்டப்பட்டிருக்கிறார். (கவிப்பேராசான் மீரா விருது-2015; தமிழன்பன் 80 விருது (கவிதை)-2022)

நூல்:

துளிர் விடும் விதைகள் (2014), அகரம் வெளியீடு
பாட்டன் காட்டைத் தேடி (2016), அகரம் வெளியீடு
காகிதக் கதவுகள் (2021), ஒரு துளி கவிதை புதுச்சேரி வெளியீடு

நூல் குறிப்பு:

தமிழ், இயற்கை, சூழல் காப்பு, சமூகம், காதல், குடும்பம், பெண் முன்னேற்றம், கவியரங்கக் கவிதைகள் என்று பல்சுவையில் புதுக்கவிதைகளும் மரபுக்கவிதைகளும். 

நூல்:

பெருமைக்குரிய பெண்கள் (2022),  ஒரு துளி கவிதை புதுச்சேரி வெளியீடு  

நூல் குறிப்பு:

அன்றாட வாழ்வின் தடைகளைத் தகர்த்து சாதனை படைத்துவரும் பெண்களை நேர்காணல் கண்டு வல்லினச் சிறகுகள் மின்னிதழில் திங்கள் தோறும் வெளிவந்த நேர்காணல்களின் தொகுப்பு.

நூல்:

My Sweet Tomato, Where Did you go? Amazon Kindle

நூல் குறிப்பு:

இயற்கை, அன்றாட வாழ்வின் காட்சிகள், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் என்று பாடும் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு.

 

தொடர்புக்கு:

தமிழ்: https://thaenmaduratamil.blogspot.com/

ஆங்கிலம்: http://sangamliteratureinenglish.blogspot.com/  http://innervoiceofgrace.blogspot.com/

வலையோளி:  https://www.youtube.com/channel/UCIu00VHLLh7_NzN5CLCrmVw

முகநூல்: https://www.facebook.com/kodi.malligai.7/

 

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

by Swathi   on 19 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு. அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு.
பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம். பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்.
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.