LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

யூகோ சாவேஸ்

அடங்கிப் போகும் தன்மையும் , அழுது

புலம்பும் போக்கும் பயனற்றவை .


முதலாளித்துவத்திற்கு எதிராகவும் , ஏகோதிபத்திய அமெரிக்காவிற்கு எதிராகவும் , உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிராகவும் போராடியவர் . உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேக மூட்டிய தலைவராக விளங்கியவர் யூகோ ரஃப்யெல் சாவேஸ் பிரியாஷ் (hugHugofdfhd Hugo Rafael Chavez Frias ) ஆவார் . வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்தவர் . தென் அமெரிக்க முதல் குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் அதிபர் ஆவார் . இவர் இடதுசாரித் தலைவர் . இவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்தாலும் பசி , நோய் , கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக அமைப்பை ஏற்படுத்த முயன்று பல்வேறு அளப்பரிய சாதனைகளைப் புரிந்தார் . இவர் 1954 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று வெனிசுலாவில் பிறந்தார் . வெனிசுலா இராணுவக் கல்லூரியில் படித்தபோது சே குவேராவின் டைரி , மர்க்சிய நூல்களை படித்ததால் மர்க்சியவாதி ஆனார் .

புரட்சிகர பொலிவியன் இயக்கத்தை ஆரம்பித்து பொலிவியாவில் புரட்சி நடத்தினார் . புரட்சி தோல்வி அடைந்தாலும் , மக்கள் செல்வாக்கு பெருகியதால் விடுதலை செய்யப்பட்டார் . தேர்தலில் வெற்றிபெற்று 1998 ஆம் ஆண்டில் அதிபரானார் . பின்னர் பொலிவிய சோசலிசக் குடியரசு அமைத்தார் . எண்ணெய் வளங்களை நாட்டுடமை ஆக்கினார் . உலகமயத்திற்கு மாற்றாக மாற்று உலகம் சாத்தியம் என்பதை நிரூபித்தார் . இலவச மருத்துவம் , இலவசக் கல்வி , உணவுப்பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டது . வெனிசுலாவைப் பற்றி உலகம் பேசும் அளவிற்கு அதை மாற்றினார் . சாவேஸ் புற்றுநோயால் தனது 54 ஆம் வயதில் 2013 ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார் . அவரது இறுதி ஊர்வலத்தில் 8 கி . மீ நீளத்திற்கு 20 லட்சம் மக்கள் கலந்துகொண்டனர் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.