தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!
(வரலாற்றுக் கவிதை நாடகம்)
காட்சி 26
காலம் : முற்பகல் இடம் : சிறைச் சாலை வருவோர்கள் : பெரிய மருது, சின்ன மருது, (பெரிய மருதுவை முகங் கொடுத்து பாராமலே)
சின்ன மருது காண வருவதாய் உரைத்தான் காவலன் சொன்னதும் மறுத்தேன் கோணல் மதிமிகும் கூட்டம் கொண்டது கொடுமையில் நாட்டம் போன பொழுதினி வருமோ? பொய்தான் நிலைத்திடப் பெறுமோ? ஆன வரையிலே தடுத்தும் அண்ணன் வருவதேன் அடுத்தே
பெரிய மருது வான் சுரக்கும் நீரும் என்றோ வற்றிடக் காண்போம் அன்றோ நான் உகுத்த கண்ணீர் எல்லாம் நாவிருந்தால் உண்மைச் சொல்லும் தான் பொழியும் நீரைக் கண்ணும் தடையின்றிக் கொட்டு தின்னும் ஏன் மறுத்தாய் தம்பீ. அண்ணன் ஏதுக்கும் உதவான் என்றா?
சின்ன மருது வாட்டி வதைக்க வேண்டாம் அண்ணா வந்த வழியில் போங்கள் மன்னா ஈட்டி எறிந்து வந்தால் நானும் இமைக்க மாட்டேன் உண்மை ஆனால் ஓட்டி விட்டேன் பார்வை இமைகள் ஒன்றஇறுக்கி விட்டேன் இணைத்து போட்டு உடைக்க வேண்டாம் அண்ணா புனிதச் சிலையை போங்கள் அண்ணா
பெரிய மருது
நாங்கள் ஒருவரென்று நாளெல்லாம் வாழ்ந்தோமே போங்கள் எனச் சொல்லும் பொல்லாங்கு எங்குகற்றாய்?
ஓங்குபுகழ் பெற்றவனே உன் மனதில் என்னகுறை? தீங்கறியா தம்பீயிதைத் தாங்காது அழுகின்றேன்
கட்டிய மனைவியை விட்டு நான் தவிப்பதாலே கலங்கிடேன் மனதிலே நலங்கெடேன் அவராலே கிட்டிய மக்களை எட்டியே பறித்ததாலே இரங்கிடேன் எனதுளத் தரங்கெடேன் இவரலாமென்? பட்டமும் பறித்ததால் பதவியைக் கெடுத்ததால் பதறிடேன் என்றுமே கதறிடேன் என்முன்னே சுட்டிடத் தொடைமுறிந் தற்றிடப் பார்த்தேனே சுக்கலாய் இதயமும் வெடிக்கலையே ஐயோ.
சின்ன மருது
இனியும் எதற்கு நினைப்பானேன் இதயம் அதற்கு வெடிப்பானேன் கனியும் உதிர்ந்து விட்டாலும் காய்க்க அதுவே வித்தாகும் குனியும் கூட்டம் இருந்தாலும் குள்ள மதியும் நிறைந்தாலும் பணியும் தொடரும் பயமெதற்கு பாதை தெரியும் விடுதலைக்கே.
பெரிய மருது நானும் வாழ்வில் என்றும் பயந்ததுண்டோ? நாமும் எதிரி கண்டு நயந்ததுண்டோ? ஊனும் உயிரும் எனக்குத் துச்சமடா உந்தன் நலனே எந்தன் அச்சமடா.
சின்ன மருது அஞ்சினாலே சாவதாகும் அதில்வீரம் போவதாகும் கொஞ்சு புகழ்ச் சாவெமக்குக் குவலயத்தில் ஓர்முறைதான் நெஞ்சுரத்தில் குலப்பெருமை நிலைத்திடவே வேண்டுமென அஞ்சாறு வயதிலேயே அறிவூட்டி வைத்தீரே மிஞ்சிவந்த பகை எதையும் மிதித்தழிக்க வேணுமடா மீறியியர் குடித்தாலும் மென் நகையே காணுமடா
வஞ்சியரோ அழுவதற்கு? வழங்கினீறே அறிவெனக்கு வந்துவிட்ட போதினிலே வழுவெதற்கு வாழ்வினிலே. எவரேனும் வருமுன்னே இங்கிருந்து போங்க ளஎண்ணா எதற்காக அவலத்தால் இளக்காரம் தேடவேண்டும் தவறேதும் புரியவில்லைத் தாய்நாடும் அறியவில்லை.
தனித்து நமைப் பிரித்தாலும் தாழ்வேதும் நமக்கில்லை. அவரவரும் சமயமென ஆடுவதும் நிலைப்பதில்லை அந்நியர்க்கு வாழ்விங்கு அதிகநாட்கள் நிற்பதில்லை.
பெரிய மருது
அருணன் மேற்கே உதித்திடலாம் அதற்கும் இயற்கை இடந்தரலாம் தருணம் எதற்கும் வரி வந்திடலாம். தம்பீ வீரம் குன்றிடவா! வருமிப் பகையை நகைத்திடுவேன் வாழ்வின் முடிவை ஏற்றிடுவேன் கருணை வேண்டிக் கேட்கின்றேன் கண்ணே என்னைப் பார்த்திடடா.
சின்ன வயதில் நீயழுதால் சேர்ந்து அழுவேன் நினைவில்லை என்ன உனக்குக் குறைவெனினும் எனக்கு என்றே தவித்திடுவேன் பின்னர் அதனை மறப்பதற்கே பிஞ்சு முகத்தைப் பார்த்திடுவேன் என்னைப் பார்த்து நீ சிரித்தால் எல்லாம் மறந்து மகிழ்ந்திடுவேன் அஞ்சுவ தஞ்சாமை பேதமையே அழகுத் தமிழ்தருமிப் போதனையே. மிஞ்சி யறியாத என் தம்பீ மெதுவாய் நீயுமிப் படிதிரும்பி கெஞ்சிக் கேட்குமுன் அண்ணனிடம் கிட்டே வந்து சொன்னவிதம் கொஞ்சம் என்னைப் பார்த்திடடா குறுநகை காட்டிச் சிரித்திட்டா.
சின்ன மருது உங்கள் மேலே ஆணையிட்டேன் உண்மை நானும் காணமாட்டேன் கண்கள் இருக்க வேண்டுமெனில் கடிதே நீங்கள் சென்றிடலாம்
பெரிய மருது பாவி யென்று வெறுத்தாயா? பார்க்க இன்று மறுத்தாயா? கேவி அழுவதும் கேட்டாயா? கேட்டும் முகத்தைக் காட்டாயா?
சின்ன மருது கேவியே அழுவதைக் கேட்கின்றேன்
கேட்டும் நிறுத்திட மறுப்பதுமேன்? ஓவியம் பார்த்திடும் கண்களினால்
ஓட்டை உடைசலைக் காண்பதுவோ? காவியம் படைத்திடும் உருவினிலே,
கைவிலங் கோடுதான் வருவதுவோ? பாவியென் விழிகளைப் பறிக்கின்றேன்
பார்த்தென் முகத்தைச் சிரித்திடலாம்.
பெரிய மருது
குண்டுபட்ட தொடை ரெண்டு பட்டததை
கண்டுவிட்டு மனம் தவிக்கிறேன் கொண்ட சுட்டும்விழி ரெண்டும் அத்துவிழக்
கண்டு விட்டு மனம் சிரிக்கவோ?
சின்ன மருது ஆனமட்டும் சொன்னாலும் அண்ணன் மனதும் ஏற்கலையே ஆணையிட்டுச் சொன்ன பின்னும்
அவரென் நிலையைப் பார்க்கலையே
போன தெல்லாம் போனாலும்
பொல்லாங் கென்னில் ஆனாலும் காண வொண்ணா காட்சியை நான்
காண்பதில்லை சத்தியமே.
பெரிய மருது
மீண்டு மவன் சத்தியமாய்
மென்மேலும் கூறுகின்றான் ஆண்டவனே புரியலையே
அதன் பொருளும் தெரியலையே.
சின்ன மருது
கண்களை இறுக்கி மூடிவிட்டேன்
காட்சியை இணைத்து ஓடவிட்டேன் உங்களை அறிந்த நாள் முதலாய்
உயர்விலா ஒன்றைக் காண்கிலேன் நான் பெண்களும் கூடிப் பாடுவரே
பெருமிதம் சேர்த்து ஆடுவரே. (முதலில் மகிழ்ச்சி இசையில், பின் கண்களைத்
திறந்ததும் சோக இசையில்)
‘’சாந்துப் பொட்டு தளதளக்க
சந்தனப் பொட்டு கமகமக்க
மதுரை கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது வாரதைப் பாருங்கடி". ( பெரிய மருது விலங்கிட்ட கையோடு மேடையின்
பின் பகுதியிலிருந்து சின்ன மருதுவை நோக்கி பரிதாப நிலையில் மேடையின் முன்னோக்கி நடந்து வருதல் ) .
கண்களே எந்தன் கண்களே காட்சியாய் இதையும் காண்பதுவோ?
கீழ்த்திசையின் நிம்ராட்டே கீர்த்திமிகுப் பேரரசே
வாழ்த்திநமைப் பாடிடவே வந்தகவி எத்தனை பேர் போர்த் தொழிலின் காவலனே போட்டியில்லா
மாவீரா
ஆர்த்தெழுந்துன் கால்மடிந்த ஆண்புலிகள் எத்தனையோ? பாவையர் போற்றவேண்டி பாட்டிலுனைக் காட்டவேண்டி
கோவையின் நாயகனாய் கொண்டிட்டான் சாந்து யென்பான்
இத்தனையும் பெற்றவனே என்னருமைச் சோதரனே எத்தனையாய்ப் பார்க்கின்றேன் ஏற்றமெலாம் சோ்க்கின்றேன்
அத்தனையும் பார்த்திருப்பேன் ஆகாதல் காட்சியுமேன்?
உத்தமனே நம்வாழ்வில் ஓர்குறையும் தானேதற்கு ஒத்தமனம் கொள்வோமே ஒா்முடி வாய் நகைப்போமே.
பெரிய மருது
என்னை மிஞ்சி விட்டாய் தம்பி
ஏற்றமிகக் கொண்டு விட்டாய்
அண்ணன் சிரிக்கிறேண்டா-மண்ணில்
அனைத்தும் மறக்கிறேண்டா ஆகா
(இருவரும் சேர்ந்து பகை கண்டு நகைத்தல்)
(திரை)
காட்சி 27
காலம் : முற்பகல் இடம் : காளையார் கோயில் வருவோர்கள் : துரைசாமி, வெல்ஷ். (கண்ணில் நீர் சொரிய சின்னவன் துரைசாமி முன்னிற்கும் வெல்ஷை முறைத்தபடி ஏங்கும் போது)
(பின் ஒலி)
தேவர் பங்காளிப் பகைமை எங்கேகும் என்றறியீர் சிங்கமறக் குலத்தினிலே பங்கமிகக் கொண்டு வந்தீர்
வெங்கொடுமை ஓட்டிவிட விடுதலையை நாட்டிவிட இங்குயிரை வித்தாக்கி இறக்கின்றோம் மறக்காதீர்!
(தேவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்துப்
பின் துரைசாமி வெல்ஷை முறைத்துப்
பார்த்தல்)
(பின் ஒலி)
சிவஞானம் அன்னை விலங்கொடிக்க அந்நியரை வேரறுக்க எண்ணமிட்டோம் எம்மால் இயலவில்லை -
இந்நாட்டில்
சிங்கங்கள் தோன்றிச் சிவகங்கை காத்திடட்டும் பங்கமிலா வாழ்வு படைத்து. (சிவஞானம் தூக்கில் தொங்குவதையும் வெல்ஷையும்
பார்த்து துரைசாமி நீர் சொரிந்த கண்ணோடு
நின்றேங்கல்.)
(பின் ஒலி)
சின்ன மருது
அங்கமதும் குறைந்து விட்டேன் அதனால்முன்
நடந்துவிட்டேன்
எந்தனுயிர் அண்ணணுக்கு ஏற்றயிடம் பார்த்து
வைப்பேன்
செல்வமகனே துரைசாமி சின்னவனே என்னுரைகேள்!
வெல்வதில்லை தர்மத்தை வெகுநாட்கள் சூதுகள் தாம்!
மண்ணருமை உணா்ந்தவா்கள் மறப்பாரோ
சுதந்தரத்தை?
என்னருமைத் தாயகமே ஏற்றுக்கொள் என்னுயிரை (சின்ன மருது தூக்கில் தொங்க கண்ணீர் பெருக்
கொடுக்கக் காணுகிறான் துரைசாமி.
வெல்ஷை முறைக்கிறான் விம்மி அழுகிறான்.)
பெரிய மருது செங்குருதி சிந்திவந்தே சிவந்துவிட்ட எந்தனுயிர்! சிவகங்கைச் சீமையே சேர்ந்தொழியும் தீமையே
எங்கிருந்தோ வந்தவனா இங்திருந்து ஆண்டிடு வான்? பங்கறிந்து செயல்படுவீர் பயன்பெறுவீர்
சுதந்திரத்தால்.
(பெரிய மருதுவின் பிணம் தொங்க வெல்ஷ்
அஞ்சிக் குனிகிறான். துரைசாமி கண்ணீர்
வடித்து ஆத்தித்தோடு விம்மி அழுகிறான்.) (துரைசாமி முகம் மட்டும் தெரிகிறது. பாட்டொலி
கேட்கிறது.)
“'தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்.''
“'என்றுதணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்றெமதன் னைகை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்.''
(பின் குரல்)
கண்ணீரும் செந்நீரும் காலமெலாம் கொட்டி வந்தோம்
எண்ணி முடியாத எத்தனை உயிர்கொடுத்தோம் வேலெடுத்தோம் வாளெடுத்தோம் வீரருயிர் அர்ப்பணித்தோம்
காலெடுத்து வைத்துவிட்டோம் கண்டிடுவோம் வெற்றியெனச்
சூளுரைத்துப் பொங்கிவந்தோம் சொன்னபடி செய்து வந்தோம்
நாளுரைத்து மோதிவந்தோம் நம்குருதி சிந்தி வந்தோம்.
சூழ்ச்சிக்குப் பஞ்சமில்லை சோர்வும் நமக்கில்லை வீழ்ச்சிக்கு அஞ்சவில்லை வேற்றரசை ஏற்கவில்லை
வந்தவனும் போக வேண்டும் வாழ்விங்குக் காண வேண்டும்
எந்த விதத் தியாகமும் ஏற்றிடுவோம் என்றிருந்தோம். (திரையில் கைத்தடி கதா்த் துண்டோடு காந்தியின்
நிழற்படம்) காந்தி எனுத்தலைவன் கண்டெடுத்தோம் பாரதத்தில் சாந்தியெனும் ஆயுதமும் சத்தியமும் தந்துவிட்டான் பொக்கைச் சிரிப்புதிர்த்தான் பொங்கி எழுந்து விட்டோம்
அக்கரைச் சீமையான் ஆட்டமிகக் கண்டுவிட்டான்
தப்பிவிடும் நேரமதைத் தானே கணித்துவிட்டான் ஒப்பியே நம் கொடியை ஊரறிய ஏற்றுவித்தான்,
(நேரு உடனிருக்க லார்டு மவுண்ட்பேட்டன் செங்
கோட்டையில் பாரத மணிக்கொடியை
பலரறிய ஏற்றும் நிழற் காட்சி)
பெற்ற சுதந்திரத்தைப் பேணியிங்குக் காப்பதற்கு, உற்ற தலைவன் உலகு மெச்சும் நேரு கொண்டோம்
நாட்கடக்க நாட்கடக்க நாமென்ன செய்து வந்தோம் நம்மை நினைந்தோமே நாட்டை நினைந்தோமா? உண்மை நிலையாலே ஒத்துழைப்புத் தந்தோமா?
எங்கே எமதுரிமை என்றோமே நம்மவரில் இங்கே என்கடமை என்றவர் தாம் எத்தனைபேர்? முன்னே நிகழ்ந்தவற்றை முற்றும் நினைத்திருந்தால் பின்னே கெடுதலில்லை பேரிழப்பும் என்றுமில்லை நூற்றாண்டு காலமாக நோற்றிருந்து பெற்றோமே காற்றிலே விட்டிடவா கண்டோம் சுதந்திரமும்? கண்ணே போல் காக்கக் கருத்தில் இருத்துமிதைத் "தண்ணீர்விட் டோவளர்த் தோம்.''
[முகப்புத் திலை]
|