LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- வாசித்த அனுபவம்

சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்

"சிந்தனை தொழில் செல்வம் ."
டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி ..
வானதி பதிப்பகம் முதல் பதிப்பு 1984 . விலை ரூபாய் 12.மொத்த பக்கங்கள் 190.
டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார்.
‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை எழுதியவர். 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். இவர் எழுதிய "என்னைச் செதுக்கிய எண்ணங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.
இவர் மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் கிராமத்தில் பிறந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேதியியலில் பட்டம் பெற்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
கும்பகோணம் கல்லூரியிலும் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் வேதியியல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்காவில் உள்ள மவுண்ட் செனாரியோ கல்லூரி, மின்னசோட்டா, ஐடகோ பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். விஸ்கான்சினில் உள்ள உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாகியாக நான்காண்டுகள் பணியாற்றினார்.
1982ஆம் ஆண்டில் பார்க்கிளே கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். அதனை 1987ஆம் ஆண்டில் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்பினார்.
1987ஆம் ஆண்டில் மக்கள் சக்தி இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
எழுதிய நூல்கள்
எண்ணங்கள் .
மனம் பிரார்த்தனை மந்திரம்
தலைவன் ஒரு சிந்தனை
உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்
பிரச்சனைகளுக்கு முடிவு காண்பது எப்படி?
ஆத்ம தரிசனம்
தட்டுங்கள் திறக்கப்படும்
நாடு எங்கே செல்கிறது?
நீதான் தம்பி முதலமைச்சர்
சிந்தனை தொழில் செல்வம்
மனித உறவுகள்
நெஞ்சமே அஞ்சாதே நீ
தன்னம்பிக்கையும் உயர்தர்ம நெறிகளும்
ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்
வெற்றிக்கு முதற்படி
உலகால் அறியப்படாத ரகசியம்
சாதனைக்கோர் பாதை
சொந்தக் காலில் நில்
வெற்றி மனோபாவம்.
கம்பன் புகழ் விருது, கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை விருது பெற்றார்.
######
இனி சிந்தனை தொழில் செல்வம் நூல் குறித்து பார்ப்போம்:
நமது நாட்டில் இயற்கை வளங்கள் ஏராளமாக உள்ளன .புதிய சிந்தனைகள் இங்கே காத்திருக்கின்றன .தொழில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன .செல்வம் பெறுவதற்கான மார்க்கங்கள் உங்கள் கண் பார்வைக்காக காத்திருக்கின்றன என்று அழைப்பு விடுக்கிறார் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள்.
இந்த மண்ணிலே பொம்மை இருக்கிறது என்று எப்படி கலைஞர் கண்டுபிடித்தான்? இந்த மண்ணிலேயே ஒரு பானை ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை எப்படி முதல் குயவன் கண்டுபிடித் தான்? இந்த மண்ணிலே நீர் சுனை இருக்கிறது என்று எப்படி விவசாயிக்கு தெரிந்தது என்கிற கேள்விகளை கேட்டுவிட்டு பதிலும் அவரே தருகிறார்.
தேவையை ஆசையாக்கும் போது ,ஆசையை லட்சியமாக்கும் போது ,லட்சியத்துடன் மன உறுதியையும் அயராத உழைப்பையும் சேர்க்கும்போது ,தோல்வியைக் கண்டு மனம் கலங்காமல் மேலே போய்க் கொண்டிருக்கும்போது ,நாம் என்ன விதை செடியாகி பூவாகி காயாகி கனியாகி லட்சோபலட்சம் கனிகளாக வானத்திலிருந்து நம் மடியில் உதிர்கின்றன". என்று ஆணித்தரமாக பதில் கூறுகிறார் ஆசிரியர்.
அந்த செயல் ,
அந்த ஆக்க சக்தி,
அந்த அசாதாரணமான தெய்வீகம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது .அங்கு கண்களை அகல விட்டால் போதும் காணலாம் .அன்பை விட்டால் போதும் எல்லோரும் உதவுவார்கள் .துணிவுடன் செயல்பட்டால் போதும் பலன் கிடைக்கும் என்கிறார் ஆசிரியர்.
"ஆசை பிறக்கும் போதே அதை செய்து முடிக்கும் திறனும் அந்த ஜீவனுக்குள் அடங்கி இருப்பதால் தான் அந்த ஆசையே
பிறந்தது ,"என்கிறார் ஜேம்ஸ் ஆலன்.
" உங்கள் ஆசையையும் லட்சியத்தையும் உங்கள் கண்களுடன் மற்றொருவர் பார்க்கும்போது பார்த்து பாராட்டி ஊக்கமும் உற்சாகமும் தரும் போது அந்த எண்ணம் அதை அடையும் மகத்தான வலிமை பெறுகிறது," என்கிறார் ஆன்மீக எழுத்தாளர் பிலாரென்ஸ் ஷின்.
திரும்பத் திரும்ப எண்ணப்படும் ஆசை ஆழ் மனத்தில் புகுந்து நம்மை அறியாமல் நம்மையே ஆட்டுவிக்கிறது செயல்படத் தூண்டுகிறது என் லட்சியம் கைகொடுக்கிறது என்கிறார்கள் ஆழ்மனம் பற்றி எழுதும் மனநூல் அறிஞர்கள்.
நாத பிரம்மத்தில் தன்னை மறக்கும் பாடகன் போல் நமது லட்சியத்தின் நம் மனத்தை ஒருமுகப்படுத்தும் போது அங்கே நாம் அடைகிறோம் அங்கே என்ன சக்தியை பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி அப்போது பிரபஞ்ச சக்தியை நாம் கற்பனை மூலம் இந்த பூமிக்குள் இறங்கி உருவெடுக்கிறது நம்பமுடியாத சாதனைகளும் அதிசயங்களும் நிகழ்கின்றன என்று விஞ்ஞானிகள் விளக்கம் தருகிறார்கள்.
எண்ணத்தின் பாதை இதுதான் ;சாதனையின் வழிமுறை இதுதான்; இதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் என்கிறார் ஆசிரியர்.
இவ்வுலகில் உங்களுக்கும் எனக்கும் ஊருக்கும் உலகுக்குமாக ஏராளமாக பொருட்கள் இருக்கின்றன. நாம் எத்தனை பேர் பங்கு போட்டுக் கொண்டாலும் தீராத அளவுக்கு இந்த பிரபஞ்சம் பொருட்களை பெற்று இருக்கிறது. அது நம் எல்லோருக்குமாக இருக்கிறது .இது பிரபஞ்சம் ;பஞ்சமே இல்லாத பிரபஞ்சம்.
ஆகவே கையகல நிலம் தானே இருக்கிறது என்று கவலைப்படவேண்டாம். கையகல நிலம் வைத்துக்கொண்டு கழுத்துக்கு மேல் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஜப்பானியர்கள் .
கையில் காசு இல்லையே என்று கவலைப் படாதீர்கள் .காசையும் பணத்தையும் தங்கத்தையும் வைரத்தையும் நெல்லையும் கோதுமையையும் பல வருஷங்களுக்குப் போதுமானதாக எடுத்துக் கொண்டா அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறவில்லை .
நம்முள் ஒரு மகத்தான ஜீவன் இருக்கிறது .அது வாழத் துடிக்கிறது .எதையும் சமாளிக்க முயல்கிறது .எல்லாவற்றையும் அனுபவிக்க ஆசைப்படுகிறது.
பிளாஸ்டிக் சர்ஜ்னாக வாழ்வைத் துவங்கிய மன அறிஞராக உலகிற்கு தன் அனுபவ அறிவை வழங்கிய மேக்ஸ் வெல் மட்ஸ் எழுதுகிறார் ,"லட்சியத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஒரு பொறி --ஒரு எந்திரம் தான்-- மனம் தன் பாதையை தானே சரிப்படுத்திக் கொள்ளும் எந்திரம் அது.அப்படிப்பட்ட எந்திரன் தான் மனம் என்று எழுதுகிறார்.
நமது மனம் எதையும் உருவாக்கும் சூட்சுமத்தை வைத்திருக்கிறது .அதே போல எல்லா வகை இன்பங்களையும் துய்ப்பதற்கு தான் மனம் படைக்கப்பட்டிருக்கிறது. மனம் இல்லாவிட்டால் உடல் இன்பங்களை நாம் உணர முடியாது .
சில கட்டுப்பாடுகள் தேவை .நமது ஆசைகள் பிறரது உரிமைகளை தலையிடாத வரை எதுவும் தவறில்லை .வாழ்வில் ஒரு நிதானம் --ஒரு கட்டுப்பாடு --ஒரு சமநிலை அவசியம் தேவை.
ஒரு நாட்டுக்கு நிலவளம் நீர்வளம் அவசியம்தான். ஆனால் மக்கள் மன வளத்தால்தான் செல்வந்தர்களாக ஆகிறார்கள். சிறு தொழிலையும் பெரும் தொழிலையும் உருவாக்குகிறார்கள் .
ஒரு நாட்டை மகத்தான நாடாக வலிமை படைத்த நாடாக மாற்றினார்கள் .
மனவளமும் உழைப்பும் உறுதியும் தான் அமெரிக்காவாக ஜப்பான் தென் கொரியா சிங்கப்பூர் ஆக உருவெடுக்கின்றன .
எத்தனை வகை நாடுகள்
எத்தனை நிற மக்கள் .
நம்மால் முடியுமா ?முடியும் !
திரைகடலோடியும் திரவியம் தேடியவர்கள் நாம்.
நம்புங்கள். நம்மால் முடியும் .
வாருங்கள் என்று உற்சாக அழைப்பு விடுக்கிறார் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள்.
###₹₹₹
என் உரை:
எண்ணம் போல் வாழ்வு ,மனம் போல் வாழ்வு என்று சொன்னபடி நம் மனத்தை நம்மால் கட்டுப்படுத்தி நமது எண்ணப்படியே வாழ முடியும் ;வாழ்வோம் .
சிந்தனை செயல் தொழில் எல்லாவற்றையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வாழலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 
-திரு.நா.கருணாமூர்த்தி , (முகநூல் பதிவு )
by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்'  நூல் வெளியீடு 'வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்' நூல் வெளியீடு
சென்னை புத்தகத் திருவிழாவில் சென்னை புத்தகத் திருவிழாவில்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.