LOGO

மேல் அக்கரை சாஸ்தா

  கோயில்   மேல் அக்கரை சாஸ்தா
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   சாஸ்தா
  பழமை   
  முகவரி
  ஊர்   கன்னியாகுமரி
  மாவட்டம்   கன்னியாகுமரி [ Kanniyakumari ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

முன்னுரை:

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்ற வாழ்வும் நனி சிறந்தது" என்று பெரியோர் சொல்ல கேட்டிருக்கிறேன். குலதெய்வம் என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட சொத்து. மூதாதையர்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு, ஏதோ ஒரு தெய்வ குற்றம் இருக்கிறது என்று நம்பினார்கள். அதற்காக அவர்கள் தாங்கள் விரும்பும் கிராமதேவதை என்று அழைக்கப்படும் சாஸ்தா (ஐய்யனாரப்பன்), முனீஸ்வரன், மாரியம்மன், பிடாரியம்மன், இசக்கியம்மன், போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள். குலதெய்வம் என்பதின் அடிப்படை என்னவென்றால் தங்களுடைய மூதாதையர்கள் எந்த உருவில் வழிபட்டார்களோ அதையே நாமும் வழிபடுவதில் தான் உள்ளது. இந்த நாகரீக உலகிலும் நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் நேரிட்டால், ஜோதிடர்கள் "நீங்கள் குல தெய்வத்தை மறந்து விட்டீர்கள் ஆகையால் தான் உங்களுக்கு இந்த துன்பம் நேறிவிட்டது" என்று கூறுவார்கள். இதை நாம் சிந்தித்து பார்த்தால் நம்முடைய மூதாதையர்கள் நடந்து வந்த பாதையை (அவர்களது பாதம் பட்ட மண்) நாமும் கடைப்பிடிக்கிறோம் என்று எடுத்துக் கொள்ளலாம் அப்படி நாம் அந்த குலதெய்வங்களை வணங்கும் போது அந்த தெய்வத்தின் அருளோடு நம்முடைய மூதாதையரின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.

 

தல வரலாறு: எங்கள் குலதெய்வ கோவிலில் பெயர் மேல் அக்கரை சாஸ்தா கோவில் ஆகும். இக்கோவில் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலையகுண்டில் உள்ள மேலக்கரை என்னும் கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி உள்ள காட்டில் தான் உள்ளது. எங்கள் குல தெய்வத்தின் பெயர் திருமேனிகண்ட பூசாஸ்தா ஆகும். இப்பெயரினது அர்த்தம் நாங்கள் பூக்குவியலினால் அலங்கரிக்கப்பட்ட இறைவனது (சாஸ்தா) திருமேனியை கண்டோம் என்பதுதான். மனிதர்களை வாழவைக்கும் தெய்வமான விஷ்ணுவும் (வைணவம்) மனிதர்களுக்கு முக்தி கொடுக்கும் தெய்வமான சிவபெருமானும் (சைவம்) ஒரே நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கும் தெய்வமே சாஸ்தா. மேற்கரையில் உள்ள மலையின் மேல் கற்பாறையில் இருந்தார் பகவான் சாஸ்தா. அவரை பூஜிக்கும் பிராமண குலத்தை சேர்ந்த பூசாரி தினம்-தினம் அவ்விடத்திற்கு சென்று அவரை பூஜிக்க முடியவில்லை என்று இறைவனிடம் மன்றாடினார். அதற்காக இறைவன் (சாஸ்தா) 200 அடிக்கு கீழே வந்து காட்சி கொடுத்தார். இவ்விசயத்தை நம்பமுடியாத மற்ற சமுதாயத்து மக்கள் அவர் மீது குற்றம் கூறினர் அவர்களை நம்ப வைப்பதற்காக இறைவன் அம்மலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் யாதவ குலத்தை சேர்ந்த ஒருவருக்கு இறைவன் (சாஸ்தா) ஆடுகுட்டி ஆக வந்து துள்ளி ஆடி காட்சி தந்து அருள் கொடுத்தார் ஆகையால் இறைவன் துள்ளும் குட்டி மாடன் என்ற பெயரோடு இங்கு அருள்பாவிக்கிறார்.மற்றும் சாஸ்தாவை தினம்-தினம் வணங்கும் வன்னியர் குலத்தைச் சேர்ந்த இரண்டு பக்தர்களுக்கு அவர் காட்சி தந்து அருள் கொடுத்தார் ஆகையால் இங்கு அவர் வன்னிய மாடன் என்ற பெயரோடும் விளங்குகிறார்.இக்காட்சிகளை தனது தவத்தில் பார்த்ததாக சொன்ன தவசுதம்பிரான் என்ற மாமுனிவனுக்கும் இங்கு ஒரு திருத்தலமும் இருக்கிறது. கடவுளை வழிபடுவதில் ஜாதி, மத வேறுபாடு இல்லை என்பதை காட்டுவதற்காகவும் இறைவன் (சாஸ்தா) ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் காட்சி தந்து அருளியுள்ளார்.கார்மேனி கூடம் பரிவாரகாச சிவபெருமானின் நாங்க அவ தாரம் சுடரொளி ஆகும் சிவபெருமானின் அவதாரமாக சுடரொளியில் பிறந்த விசம் இக்கோவிலில் நாகமணி பூதத்தான் என்ற பெயரோடு காவலாக இருக்கிறார்.இங்கு பங்குனி உத்திரம் ஆனி உத்திரம் மற்றும் மார்கழி மாதத்தில் வரும் மண்டல பூஜை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை மனதாலும் காதாலும் வழிபாடு செய்வது இப்பூஜையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.இங்கு தினமும் அன்னதானம் சாப்பாடு செய்து கொடுப்பது பிரதானமாக உள்ளது.

 

முடிவுரை: "ஓல்ட் இஸ் கோல்ட்" என்பது போல் நமது மூதாதையர்கள் ஏற்படுத்திவைத்த இந்த நடைமுறை நமக்கு நன்மையை ஏற்படுத்திகொடுக்கிறது. பரந்து விரிந்த இந்த உலகம் கையளவில் சுருங்கிவிட்டது ஆகையால் உறவுகள் சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் அங்கங்கே சென்று விட்டார்கள், பிரிந்த உறவுகள் தெய்வத்தின் பெயரால் ஒன்று சேர வேண்டும் என்று நம் மூதாதையர்கள் சிந்தித்து ஏற்படுத்தியதுதான் குலதெய்வம் என்று நான் நம்புகிறேன்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில் புத்தேரி, நாகர்கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் திருநந்திக்கரை , கன்னியாகுமரி
    அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் சுசீந்திரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில் கன்னியாகுமரி , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் மருங்கூர் , கன்னியாகுமரி
    அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில் குமார கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு விநாயகர் திருக்கோயில் கேரளபுரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறு , கன்னியாகுமரி
    அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் கன்னியாகுமரி , கன்னியாகுமரி
    அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மண்டைக்காடு , கன்னியாகுமரி
    ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார், மேலப்புதுக்குடி,தூத்துக்குடி மாவட்டம் மேலப்புதுக்குடியில் , தூத்துக்குடி
    பெரியசாமி, சீப்புலியான், காமாட்சி பெரியம்பாளையம் , அரியலூர்
    அக்கரை சாஸ்தா கோவில் பெரியம்பாளையம் , கன்னியாகுமரி
    ஸ்ரீ போத்திராஜா சொக்கநாதன்புத்தூர் , விருதுநகர்
    ஸ்ரீ சந்தன கருப்பையா சுவாமி பழையனூர் , மதுரை
    கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில் கிளிஞ்சிகுப்பம் , மதுரை

TEMPLES

    சித்தர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சூரியனார் கோயில்
    காலபைரவர் கோயில்     சேக்கிழார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     முருகன் கோயில்
    சாஸ்தா கோயில்     ஐயப்பன் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     நட்சத்திர கோயில்
    நவக்கிரக கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    அகத்தீஸ்வரர் கோயில்     சடையப்பர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    அறுபடைவீடு     மற்ற கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்