LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

குருவிக்கு இரங்கிய குணாளர்

ஒருவர் தன்னுடைய நண்பரின் பிறந்த நாளுக்குப் போகமுடியாததால் பரிசுப் பொருளை அனுப்ப நினைத்தார் . ஒரு கிளியை நன்றாகப் பேசப்பழக்கியிருந்தார் . அந்தக் கிளியையே பரிசுப்பொருளாக அனுப்பி வைத்தார் . கொஞ்ச நாள் கழித்து கிளி எப்படி இருக்கிறது என்று விசாரித்து கடிதம் எழுதினார் . “ மிகவும் சுவையாக இருந்தது . இன்னொரு கிளி அனுப்பி வைக்கவும் ” என்று பதில் வந்தது . பேசுங்கிளியை அனுப்பி வைத்த நண்பர் நொந்தே போனார் .

இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் பறவைகளிடம் பாசம் காட்டியவர் பெருந்தலைவர் காமராசர் . ஒருமுறை அவர் தமது அறையில் எதையோ தேடிக்கொண்டிருந்தார் . அவரைப் பார்க்கப்போன தங்கவேலன் என்பவர் எதைத் தேடுறீங்க அய்யா என்று கேட்டார் . “ செய்தி கேட்பதற்காக வைத்திருந்த டிரான்சிஸ்டர் ரேடியோ ரிப்பேராப்போச்சு . பழைய ரேடியோ ஒண்ணு உண்டு . அதை எங்க வச்சேன்னு தெரியல . ரொம்ப நாளா அதைப்பார்க்கவே இல்லை . எங்க இருக்கோ ” என்று சொல்லிக்கொண்டே தேடினார் . திடீரென்று அவர் முகத்தில் பிரகாசம் தென்பட்டது . இதோ இங்க இருக்கு என்றவர் எதையோ உற்றுப்பார்த்து விட்டு திகைத்தார் . ரேடியோவின் பின்பகுதி திறந்து கிடந்தது . ஒரு குருவி அதில் கூடு கட்டி இருந்தது . குஞ்சுகளும்இருந்தன . என்ன செய்யலாம் என்று பெருந்தலைவர் யோசித்துக் கொண்டிருந்தபோது அவரைப் பர்க்க வந்த நண்பர் , “ அய்யா கவலைப்படாதீர்கள் குருவிக்கூட்டை அப்புறப்படுத்திவிட்டு ரேடியோவை சரி செய்து தருகிறேன் ” என்றார் . வங்கதேச விடுதலைப்போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம் . இந்திய ராணுவம் வங்க தேசத்துக்கு உதவியாகப் போரில் குதித்துவிட்ட நேரம் . பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருந்தது . உடனே செய்திகளைக்கேட்க பெருந்தலைவருக்கு ஆவல்தான் . ஆனாலும் குஞ்சுகளோடு இருந்த குருவிக் கூட்டைக் கலைக்க காமராசருக்கு மனம் வரவில்லை . அதை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றவர் தனது அந்தரங்கச்செயலாளர் வெங்கட்ராமனை அழைத்துக் குஞ்சுகள் பெரிதாகி குருவி தன் கூட்டை விட்டுக் காலி செய்கிறவரை அங்கேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும என்று உத்தரவு போட்டார் . குருவியிடம கூட அவர் காட்டிய கருணையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை .

மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிர்களையும் நேசிக்கத் தெரிந்தவர்களே மாமனிதர்கள் ஆக முடியும் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.