|
||||||||
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 1 |
||||||||
![]() தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! (வரலாற்றுக் கவிதை நாடகம்)
காட்சி 1
கறுத்தான் மற்றும் பலர். [மருது பாண்டியர்கள் வாழ்க! ( வாழ்த்து ஒலி கேட்டுக் கொண்டிருக் தரசர்கள் முதலானோர் அனைவரும் நின்ற நிலையில் திரை விலகுகிறது. அவையோரை அமருவதற்கு சைகை காட்டி தானும் அமர்ந்து, பின் எழுந்து பெரிய மருது பேசுகிறார்.)
பெரிய மருது வாழ்த்தினிலே நாட்கடத்த வேண்டாம் இமைப்போதும் சோராதிந் நாட்டிற் குழைக்க உமையெல்லாம் ஊக்குவிப்போம் உய்ந்து. சின்ன மருது தேவர் பெருமானே தேர்வேண்டும் என்றேனே ஆவன செய்தீரா ஆலயம் சென்றீரா திருக்கானப் பேரின் தெருக்காணத் தேர்வேண்டும்
“கண்ணுடை நெற்றியான் கானப்பேர் காளையான்” விண்ணிடை வேட்கையார் வேண்டுங் குலக் கோமான் பண்ணிடை மூழ்கும் படர்சடையான் என்குலத்தை நண்ணிடும் நாயகற்கு நாட்டிலிலா தேர்வேண்டும்.
கறுத்தான் வேட்டதிரும் பீரங்கி வெந்தோட்டாத் துப்பாக்கிக் நாட்டில் இடம்பிடித்து நல்லவரை வஞ்சித்து
சின்ன மருது திறல்மறவர் திசைநோக்கித் திறைகேட்க வருவதற்கு பிறனொருவன் இதுவரையில் பிறந்ததிலை; யறிந்திடார்கள் கரம்நீட்டி மறக்குலத்தான் வரவேற்றுத் துணிவளிக்க 'சிரங்காட்டி எவனெவனோ தரங்கூட்டி மிரட்டுகிறான். ஆப்பத்தைப் பங்கிட் டதைக்கொண்ட தொன்றாக ஆப்பசைத்து வாலைவிட் டகப்பட்ட தொன்றாகும். மோப்பம் பிடித்து முரண்பாடு கண்டறிந்து ஏப்பம் விடுகின்றான் எங்கும் வளைக்கின்றான்.
கறுத்தான் ஐதரலி போயினபின் ஆணவம் மிகுந்துளது பெரிய மருது வெள்ளையரில் வெல்ஷ் துரை நல்லவர் நம் நண்பரவர் உள்ளபடி நம்முறவில் உவகைதான் காணுகின்றார்.
சின்ன மருது அக்நியூதுரை என்பான் அவருக்கும் மேலுள்ளான் பக்கென மாறிவிட்டால் பகையாக லாமன்றோ !
வம்பில் முளைத்தான் வதையறிவான் எம்பிக் குதிப்பார் எவருண்டு எதையும் தடுக்கும் துணையுண்டு நட்பும் சிறக்கும் நலமுறவே!
சின்ன மருது சொன்ன மொழிகேட்க சோதரர்கள் நிறைந்திருக்க சோர்வு அறியாதார் சூழ்ந்திங்கு மகிழ்ந்திருக்க எண்ணமுரைத்துவிடில் எப்படியும் முடித்துவைக்க எண்ணில் அடங்காத எத்தனையோ பேரிருக்க அண்ணன் சுமைகுறைக்க அண்மையில் நானிருக்க அன்ன வளமிருக்க அரண்வலியும் சிறந்திருக்க ஏற்றம் புகழிருக்க எப்போதும் துதித்திருப்போம்.
கறுத்தான் காவலன் கருணை கண்டிருக்க காலமும் அவர்க்குத் தொண்டிழைக்க ஆவலில் மிகுந்தே யகங்களிக்க ஆடவர் மிகுந்தே யார்ப்பரிக்க சேவலின் வழியில் சேர்ந்தாடும் செம்மொழித் துணையாய்ப் பெண்டிருக்க பாவலன் கவிதைப் புனைந்துவக்கும் பண்பினாற் சிறந்திந் நாடிருக்கும். பெருமைப் படுவது இருக்கட்டும் பெரிதும் மக்கள் சிறக்கட்டும் அருமைத் தம்பி குணத்தாலே அனைத்து முங்கள் பணத்தாலே தருமச் செயல்கள் மலியட்டும் தகைமை யெங்கும் தழைக்கட்டும் வருமெப் பகையும் ஓய்ந்துவிடும் வன்மம் முன்ஓடியே சாய்ந்துவிடும் ! குன்றக் குடியினிலே கோலமயில் வேலனுக்கு தொட்டகுளம் அந்தக் குளக்கரையில் ஆயிரம் தென்னைமரம் பந்தலிட்டு வைத்தாற்போல் பாங்காக நட்டு வைத்தோம். கறுத்தான் திருக்கூடல் மதுரைவாழ் தேவியரி ருப்பிடத்தில் பொருட்பொதிய "ஆவியூர்” புரந்ததுவும் மறந் திடவோ
தேவர் குமரருரு போர்த்தக் கொடுத்தீரேப் பொற்கவசம் நம்பிக்குக் கூழிட்டாள் நடுக்காட்டில் தாயம்மாள் சிவகங்கைச் சீமையிலே சேறுமுண்டு சோறுமுண்டு
பெரிய மருது எட்டாண்டு காலம் மக்கள் பட்டதுன்பம் போதும் இங்கு மட்டில்லா துயரினை நாமே மறந்திருப்போம் பகை தவிர்ப்போம்.
தேவர் முட்டவரும் காளை கண்டு எட்டிநிற்ப தேது வீரம்?
சின்ன மருது கட்டவிழும் தேவரே நீர் காட்டவரும் குறிதா னென்ன?
தேவர் மருதீசர........ மகேசா!......... மக்கள் ஒதுக்கிவிட்ட மன்னர் குலத்தவர் எக்கதியும் இல்லாது ஏங்கும் உடையணர் வெட்கங் களைந்தெறிந்து வீரந் தனைத்துறந்து மிக்க சிரமத்தால் மேல்நாட்டா னைக்கண்டு தக்க உதவிக்குத் தாள் பணிவதாய்ச் சொல்லி பக்கபலந் தேடிப் பறங்கியரை வேண்டினராம்
சின்ன மருது படையறியா பண்பினற்குப் பாகமொரு கேடா தேவர் நம்பி இருமென்று கும்பினியர் கூறினராம்.
சின்ன மருது இறைவா! இறைவா! இதென்ன சோதனையோ? முத்து வடுகநாதத் தேவருக்கு வாரிசென
சின்ன மருது
மிஞ்சினால் கெஞ்சியும் கெஞ்சினால் மிஞ்சியும் சின்னவன் உயிர்பிழைத்தான் செய்நன்றி அறிவானா?
ஊனும் உதிரமும் உண்மையில் வஞ்சனைதான்
தேவர் |
||||||||
by Swathi on 20 Feb 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|