LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 13 : காப்பதே அறிவு

எதிரதாக் காக்கும் மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்     (429)

(எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு---வரக்கடவதாகியவதனை முன்னறிந்து காக்கவல்ல அறிவினையுடையார்க்கு; அதிரவருவது ஓர் நோய் இல்லை---அவர் நடுங்க வருவதொரு துன்பமுமில்லை--பரிமேலழகர்)


அறிவு என்பதற்கு மிக உயர்ந்த விளக்கம் கொடுத்த நாடு தமிழ்நாடு!

வருமுன் காப்பது அறிவு!

அப்படிக் காத்தால் அதிர்ச்சி தரும்படியான துன்பம் நேராது!

ஆழிப்பேரலை வரப்போவதை அறிந்து எச்சரிக்கை செய்து காப்பது அறிவு!

முடிந்தபின் ஒப்பாரி வைப்பது அறிவன்று!

பள்ளிக்கூடத்தில் தீ ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று முன்கூட்டித் திட்டமிடுவது அறிவு!

93 குழந்தைகள் தீயில் கருகி மாண்டபின ;(இந்தியாவில் தமிழ்நாட்டில்);, இனிமேல் கீற்றால்; ஆன கூரை கூடாது என்பது, துன்பம் நேர்ந்த பிறகு கற்றுக்கொண்ட பாடம்!

வள்ளுவம் துன்பமே நிகழக்கூடாது என்கிறது!

ஆளில்லாத லெவல் கிராசிங்கில், தொடர்வண்டி அடித்துச் சென்று பலரைப் பலிகொண்ட பின்னர், ஆளுள்ள லெவல் கிராசிங்காக மாற்றுவது துன்பப் பாடம்!

இப்படியெல்லாம் நடந்துவிடும் என முன்கூட்டி அறிந்து செயல்படுவதே அறிவு!

வருங்காலத்தில் மக்கள்தொகை எப்படி இருக்கும்; அதற்கு என்ன செய்யப்போகிறோம் என்று இப்பொழுதே திட்டமிடுவது அறிவு!

வருங்காலத்தில் உலகம் வெப்பமாகும்; நிலத்தடி நீர் இல்லாமல் போகும்;  மண்ணிலிருக்கும் எண்ணெய் வளம் இல்லாமல் ஆகும்; காற்று மாசுபடும்; நல்ல காற்றைக் காசு கொடுத்து வாங்கவேண்டும்! இப்பொழுதே நல்ல தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குகிறோம்!

காப்பது அறிவு; எதிரதாக் காப்பது அறிவு!

எத்தனை பொறியியல் கல்லூரிகள்; எத்தனை பட்டதாரிகள் வெளிவருவார்கள்; அவர்களுக்கு என்ன வேலை கொடுப்பது; எதிரதாக் காப்பது அறிவு!

பட்டதாரிகள் உற்பத்;தியைக் குறைக்கலாமா?

வேலை வாய்ப்பைக்  கூட்டலாமா?

வெள்ளம் வரும்! ஆதை அடியாள் நுனியாள் வைத்துக் கொலை செய்ய முடியாது!

வெள்ளம் வரும்! சிவபெருமான் வரமாட்டார், திருவிளையாடல் புரிந்து காப்பதற்கு; ஏனென்றால் மாணிக்கவாசகர் இல்லை!

வெள்ளம் வரும்; ஒன்று அணைவேண்டும்; இல்லையேல் வழிவேண்டும்! வழியை அடைத்துப்பார்; மாநகரங்கள் மிதக்கும்!

எதிரதாக் காப்பது அறிவு!

இந்தப் பாலத்திற்கு வயது எத்தனை? 50ஆண்டுகள்! 49ஆவது ஆண்டிலேலயே, புதிய பாலத்தைக் கட்டிக்கொடுத்துப் பழைய பாலத்தை இடித்துவிடு!

எதிரதாக் காப்பது அறிவு!

மக்களுக்கு இம்சைகள் உண்டாவதற்குக் காரணமாவது அறிவன்று. பாலம் இடிந்து, போக்குவரத்து இரண்டு ஆண்டுகளுக்குத் தடைப்பட்டு, மக்கள் அல்லற்படுவது அறிவன்று. இவ்வண்ணம் துன்பப்படுத்த ஐயுளுஇ ஐPளு, பொறியாளர் என்னும் பெரிய பெரிய பெயர்களில் அதிகாரிகள்! வெட்கம்!
வள்ளுவம் இருந்தும் வாழத் தெரியவில்;லை!

எய்ட்ஸ் பயமுறுத்துகிறது!

சிக்கின்குனியா அச்சுறுத்துகிறது!

பறவைக் காய்ச்சல் பறந்துவருகிறது!

அல்சர் அதிகரிக்கிறது!

நீரிழிவாளர் எண்ணிக்கை விரிகிறது!

இதய நோயாளிகள் பெருகுகிறார்கள்!

வருமுன் காப்பு உண்டா?

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சைபர் குற்றங்கள், இணையதள மோசடிகள், நிதிநிறுவன மோசடிகள்---; நடந்தபின்பு பாதுகாப்பா?

நடக்கவிடாமல் பாதுகாப்பா?

செர்னோபில் அணு உலை வெடிப்பு! லட்சோபலட்சம் மக்கள் பாதிப்பு!

வருமுன் காப்பு எங்கே?

இயற்கை அழுகிறது மழையாக, வெள்ளமாக.......வீட்டிற்குள் புகுந்து......குழந்தைகளை உருட்டி........

இயற்கை கொதிக்கிறது எரிமலையாக;

எரிகிறது காட்டுத்தீயாக;

பொங்குகிறது சுனாமியாக;

வீசுகிறது புயலாக;

வெடிக்கிறது பூகம்பமாக;

இவை இயற்கைப் பேரிடர்!

வருமுன் காப்பது அறிவு!

இயற்கையோடு இயற்கையாக வாழக்; கற்றுக்கொள்!

இயற்கையை அழிக்காதே; மீறாதே!

அஞ்சவேண்டியதற்கு ;அஞ்சு!

அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்!

வள்ளுவம்!

எதிரதாக் காப்பது அறிவு!

இயற்கையைச் சிதைத்தால், குலைத்தால். இயற்கை உன்னைச் சிதைக்கும்!
மனிதனே நீ இயற்கையா, செயற்கையா?

எண்ணிப்பார்!

எதிரதாக் காப்பது அறிவு!

அறிவு என்பது காப்பாற்றவா, அழிக்கவா?

காப்பது அறிவு; அதுவே வள்ளுவம்!

வள்ளுவமே நீ காப்பாற்றப்பட்டாயே!

எத்தனையோ அழிவுகளிலிருந்தும், அறியாமைகளிலிருந்தும், துரோகங்களிலிருந்தும், உட்பகைகளிலிருந்தும்!

எதிரதாக் காப்பது அறிவு!

வள்ளுவரே வணக்கம்!

உமது அரம் கூர்மையானது; அதில் தீட்டிக்கொள்ள அனுமதிப்பீர்!

by Swathi   on 11 Apr 2016  0 Comments
Tags: அறிவு   காப்பது   திருக்குறள்   Arivu   Kappathu        
 தொடர்புடையவை-Related Articles
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது? ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது?
ஓங்கி உலகளந்த தமிழர் - 13 : காப்பதே அறிவு ஓங்கி உலகளந்த தமிழர் - 13 : காப்பதே அறிவு
ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும் ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும்
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.