LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

வெங்காய பக்கோடா

தேவையானவை :


பெரிய வெங்காயம் - 1/4 கிலோ

கடலை மாவு - 100 கிராம்

அரிசி மாவு - 50 கிராம்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் 

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் 

கொத்தமல்லித்தழை - 1 கொத்து

எண்ணெய் - 1/4 லிட்டர்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :


1. முதலில் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.


2.அடுத்ததாக நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவும்.


3. ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவும்.


4. தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிசறிக் கொள்ளவும்.


5.ஒருகடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்.

6. மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின்பு பரிமாறவும்.

by srikarthika   on 22 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.