கோயிலி்ல் தெற்கு நோக்கி அமைந்துள்ள பால மீனாம்பிகையின் எதிரே நந்தி சிலை ஒன்று சுவாமியை நோக்கியபடி அமைந்துள்ளதும், கிழக்கு நோக்கியபடி
பால சுப்பிரமணியர் இடம்புறம் திரும்பிய தனது மயில் வாகனத்துடன் காட்சி தருவதும் சிறப்பு. இத்தல விநாயகர் சந்தான விநாயகர் என்ற திருநாமத்துடன்
அருள்பாலிக்கிறார்.அக்னி கோயிலான இங்கே அமைந்துள்ள சிலைகள் உயிரோட்டத்துடன் உள்ளது போல காட்சி தருகின்றன. கூன் பாண்டியனின் வெப்பு நோய்
தீர்க்க வடக்கில் இருந்து வந்த திருஞானசம்பந்தர், இங்கே மீனாட்சி அம்மன் பிள்ளத்தைமிழ் பாடியதாகவும், இதனாலேயே இவ்விடத்திற்கு பிள்ளையார் பாளையம்
என பெயர் வந்ததாகவும் வயதில் முதிர்ந்தோர் கூறுகின்றனர். முன்பு கோயிலின் உட்பகுதியில் இருந்த பத்திரகாளியம்மனுக்கு, தற்போது வெளியே தனிச்சன்னதி
எழுப்பப்பட்டுள்ளது. சிவபெருமான் கல்யாண சுந்தரராக உமையாள் பால மீனாம்பிகையுடன் அருட்காட்சி தருகிறார். மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்ற
பெயர்களில் சக்திதேவி கொலுவீற்ற மூன்று தலங்களில் ஓர் தலமான மதுரை மாநகரில் இக்கோயிலில் அமைந்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.
கோயிலி்ல் தெற்கு நோக்கி அமைந்துள்ள பால மீனாம்பிகையின் எதிரே நந்தி சிலை ஒன்று சுவாமியை நோக்கியபடி அமைந்துள்ளதும், கிழக்கு நோக்கியபடி பால சுப்பிரமணியர் இடம்புறம் திரும்பிய தனது மயில் வாகனத்துடன் காட்சி தருவதும் சிறப்பு. இத்தல விநாயகர் சந்தான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அக்னி கோயிலான இங்கே அமைந்துள்ள சிலைகள் உயிரோட்டத்துடன் உள்ளது போல காட்சி தருகின்றன.
கூன் பாண்டியனின் வெப்பு நோய் தீர்க்க வடக்கில் இருந்து வந்த திருஞானசம்பந்தர், இங்கே மீனாட்சி அம்மன் பிள்ளத்தைமிழ் பாடியதாகவும், இதனாலேயே இவ்விடத்திற்கு பிள்ளையார் பாளையம் என பெயர் வந்ததாகவும் வயதில் முதிர்ந்தோர் கூறுகின்றனர். முன்பு கோயிலின் உட்பகுதியில் இருந்த பத்திரகாளியம்மனுக்கு, தற்போது வெளியே தனிச்சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.
சிவபெருமான் கல்யாண சுந்தரராக உமையாள் பால மீனாம்பிகையுடன் அருட்காட்சி தருகிறார். மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்ற பெயர்களில் சக்திதேவி கொலுவீற்ற மூன்று தலங்களில் ஓர் தலமான மதுரை மாநகரில் இக்கோயிலில் அமைந்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது. |