இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அருகருகே ஒருங்கே அதுவும் சுவாமிக்கு மிகவும்
பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் மிகு முக்கியச் சிறப்பு. மதுரைப் பகுதிகளில் உள்ள சிவதலங்களிலேயே சுமார் 4 அடி உயரமுள்ள பிரம்மாண்ட
மூர்த்தி வீற்றிருக்கும் தலம்.இத்தலத்தின் முன் உள்ள அம்மச்சியம்மன் கிராம தேவதை ஆவரார். இவர் துர்க்கையின் அம்சம் உள்ளவர். சங்கு
சக்கரதாரி, வடக்கு பார்த்த முகம் என்று மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் அருகில் உள்ள கோச்சடை முத்யைதா
சுவாமி கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது இத்தலம் வந்து பொங்கல் வைத்து வழிபட்ட பின்புதான் அக்கோயிலுக்கு செல்வார்கள்.
இக்கோயிலின் மண்டபங்களை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் மிகவும் பழமையான காலத்தில் ஏற்பட்ட கோயில்தான் இது
என்பதை உறுதி செய்கின்றனர்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அருகருகே ஒருங்கே அதுவும் சுவாமிக்கு மிகவும் பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் மிகு முக்கியச் சிறப்பு. மதுரைப் பகுதிகளில் உள்ள சிவதலங்களிலேயே சுமார் 4 அடி உயரமுள்ள பிரம்மாண்ட மூர்த்தி வீற்றிருக்கும் தலம். இத்தலத்தின் முன் உள்ள அம்மச்சியம்மன் கிராம தேவதை ஆவரார். இவர் துர்க்கையின் அம்சம் உள்ளவர்.
சங்கு சக்கரதாரி, வடக்கு பார்த்த முகம் என்று மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருகில் உள்ள கோச்சடை முத்யைதா சுவாமி கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது இத்தலம் வந்து பொங்கல் வைத்து வழிபட்ட பின்புதான் அக்கோயிலுக்கு செல்வார்கள். இக்கோயிலின் மண்டபங்களை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் மிகவும் பழமையான காலத்தில் ஏற்பட்ட கோயில்தான் இது என்பதை உறுதி செய்கின்றனர். |