|
||||||||
தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் அமைப்பின் தொடக்கவிழா வட அமெரிக்காவில் சிறப்பாகத் தொடங்கியது |
||||||||
![]() ஆகஸ்ட் 21, சனிக்கிழமை கிழக்கு நேரம் மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணி வரை வலைத்தமிழ் ஒருங்கிணைப்பில் "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" என்ற நிகழ்ச்சியின் தொடக்கவிழா வட அமெரிக்காவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்ப்பெயர் கொண்ட குழந்தைகள் திருக்குறள் மறை ஓதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக ச.பார்த்தசாரதி, மு.ஜெயசாரதி, குழந்தைவேல் இராமசாமி, மேகலா இராமமூர்த்தி , விஜய் சத்யா ஆரூர் பாஸ்கர், செந்தில்முருகன் வேலுசாமி நிகழ்ச்சியை செம்மையாக ஒருங்கிணைத்திருந்தனர். இன்றைய பெற்றோர்கள், இளைஞர்கள் ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவது இன்றைய வாழ்வியல் சூழலில் நாளும் அதிகரித்து வருகிறது. தமிழ்ப்பள்ளிகள் , தமிழ்ச்சங்கங்கள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தாய்மொழி தமிழில் பேசுங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். அமெரிக்கக் குழந்தை மருத்துவர்கள் குழந்தைகளுடன் தாய்மொழியில் பேச வலியுறுத்துகிறார்கள். ஆனால் நம் இளம் பெற்றோர் நம்மையறியாமல் 50-விழுக்காட்டுக்கு மேல் ஆங்கிலம் கலந்தே நம்மையறியாமல் பழக்கப்பட்டு உரையாடுகிறோம். இதை விழிப்புணர்வுடன் கவனித்து , நண்பர்கள் குழுவாக இணைத்துக்கொண்டு வாரம் ஒரு மணி நேரம் எடுத்து உரிய பயிற்சி பெற்ற்றால் ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டில் முழுமையாக தமிழை பிறமொழி கலக்காமல் பேசிவிடலாம். நாம் பேசினால் குழந்தைகள் பல வார்த்தைகளை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். இதற்காக வழிகாட்டுதல் குழு , தமிழறிஞர் குழு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, 59 மணித்துளிகளில் இந்த நிகழ்ச்சியை தொய்வின்றி நடத்த பயிற்சியும் வழங்கப்படும். மேலும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள சொற்கள் தொகுக்கப்பட்டு கையேடு உருவாக்கி பகிரப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களும் மற்றவர்களுடன் ஆங்கிலம், பிறமொழியும் கலவாமல் பேசும் நிலையை எட்டுவதை நோக்காகக்கொண்டு செயல்படுவோம். அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஆங்காங்கே தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ச்சங்கங்கள் , ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் ஒரு குழுவாக இணைத்துக்கொண்டு இதை பயிற்சியெடுக்கலாம். "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா : திருக்குறள் மறையோதல் -அமெரிக்கத் தமிழ் மாணவ-மாணவிகள் "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா வரவேற்புரை: திரு. ச. பார்த்தசாரதி ஆசிரியர், வலைத்தமிழ் தவத்திரு. மருதாசல அடிகளார் வாழ்த்து "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா - மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம் வாழ்த்து "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா : திரு. கால்டுவெல் வேள்நம்பி வாழ்த்து "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா|| தமிழ் மொழி பாடல் -இனியா பார்த்தசாரதி "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா: பேரா. முனைவர். செ. இரா. செல்வகுமார் வாழ்த்துரை "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" நிகழ்ச்சி வாழ்த்துரை: திரு. பெரியண்ணன் சந்திரசேகரன் ,அட்லாண்டா. "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா : பேரா. மேகலா ராமமூர்த்தி,வாழ்த்துரை தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா -நோக்க உரை:திரு. ஆரூர் பாஸ்கர்,திரு. ச. பார்த்தசாரதி https://www.youtube.com/watch?v=7fvJIm_sLZw&list=PL8tgK1iIsBIodcc5X0Q8xiDVHPaDzI6ij&index=13 "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா|| திரு. மு. ஜெயசாரதி மேனாள் தலைவர், அட்லாண்டா தமிழ்ச்சங்கம் "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா|| தமிழ்ப்பள்ளிகள் எவ்வாறு முன்னெடுக்கலாம்? திரு. விஜயகுமார் "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா || தமிழ்ச்சங்கங்கள் எவ்வாறு முன்னெடுக்கலாம்? "தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா || தமிழா! தமிழா! பாடல் - இலக்கியா பார்த்தசாரதி திரு.மயில்சாமி அண்ணாதுரை,விண்வெளி விஞ்ஞானி. வாழ்த்து திருமதி. கவிதா ஜவகர்,பட்டிமன்ற பேச்சாளர் வாழ்த்து திரு. வி.ஜி. சந்தோசம் வாழ்த்து திரு. சி. ராஜேந்திரன், IRS(பநி) வாழ்த்து முனைவர்.சந்திரிகா சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மன்றம், ஆஸ்திரேலியா வாழ்த்து பாவலர். அறிவுமதி வாழ்த்து திரு. கோ.பாலச்சந்திரன், இ.ஆ.ப.(பநி) வாழ்த்து நன்றியுரை: திரு. செந்தில்முருகன் வேலுசாமி
|
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 21 Oct 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|