LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் ஆளுமைகள் (Thirukkural Scholars)

திருக்குறளார் வீ.முனிசாமி ஓர் சகாப்தம்

விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி வீராசாமி பிள்ளை வீரம்மாள்  தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். திருச்சியில்  உயர்நிலைப்  பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு  ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும்  நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப்  பொருத்தமாக இருக்குமாறும்  மக்களுக்குச்  சொல்லவேண்டும்  எனும் முயற்சியில்  ஈடுபட்டார்.
**************************
1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை  நூற்றுக்கால்  மண்டபத்தில்  தொடங்கிய திருக்குறள் பரப்பும் திருக்குறளாரின் பணி அரை நூற்றாண்டையும் கடந்தது. 1941 ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர்  நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப்பாவாணர்  உள்ளிட்ட தமிழறிஞர்கள்  பங்கேற்றனர்.  சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை  மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள்  அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார்  ஆகியோருடன்  இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார்  ஈடுபட்டார்.
***************************
திருக்குறளார் சொற்பொழிவு
*****************************
தொடர்ந்து  சென்னையில்  இவர் முன்னின்று நடத்திய திருக்குறள்  மாநாட்டில்,  பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை,  சுப்பிரமணியப்பிள்ளை,  இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தந்தைபெரியார் 1948இல் சென்னை  ராயபுரத்தில் நடத்திய  திருக்குறள் மாநாட்டில்திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்,  கல்விக்கடல் சக்ரவர்த்திநயினார், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன்  பங்கேற்று திருக்குறளார் சொற்பொழிவாற்றினார்.
***************************
தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார் திருக்குறளார்.  பாமரர்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையிலான அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பியது. இதனால், வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவி திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.
******************************
பெரியார்,  பாரதிதாசன், ப.ஜீவானந்தம், காமராசர்,  டாக்டர் மு.வ.,கி.ஆ.பெ.விசுவநாதம், ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தரபாரதியார்குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதி,  உ.வே.சா., மகாவித்வான் தண்டபாணி தேசிகர்,  சுவாமி சகஜானந்தா, சுவாமி விபுலானந்த அடிகளார், சர்.பி.டி.இராசன்  சி.பா.ஆதித்தனார் கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்  உள்ளிட்ட  தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.
******************************
குறள் மலர் இதழ்
************************
திருக்குறளாரின் பணியை "குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனிசாமி சொல் கொள்வது போதுமே" என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  1949-ம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார். மேலும், மும்பையிலும், கடல்கடந்து மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் "குறள் மலர்' இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். 
******************************
நாடாளுமன்ற  உறுப்பினராக 1952 முதல் 1957 வரை இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார் என்பது கூடுதல் சிறப்பு.
*************************
 1981-ம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர்  எம்.ஜி.ஆர். அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு  தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.
*************************
உலகத்தமிழர்கள் வழங்கிய பட்டங்கள்
'******************************
வள்ளுவர் வழிப்பயணம், வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப்பாதை, வள்ளுவர் பூங்கா, வள்ளுவரும் பரிமேலழகரும், திருக்குறள் இன்பம், வள்ளுவரைக்காணோம், திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை, வள்ளுவர் ஏன் எழுதினார், வள்ளுவர் காட்டிய வழி என 30 நூல்களைப் படைத்திருந்தாலும், உலகப்பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம், திருக்குறளாருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது. இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது என  தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத்தமிழர்களால் வழங்கப்பட்டன.
****************************** 
திருக்குறளார் இயற்றிய நூல்களில்  01. சிந்தனைக் களஞ்சியம் 02.திருக்குறள் அதிகார விளக்கம் 03.திருக்குறள் தெளிவுரை பதவுரைப்பதிப்பு 04.திருக்குறள்-காமத்துப்பால் பொழிப்புரை 05.திருக்குறளார் தெளிவுரை 06.திருக்குறளில் நகைச்சுவை 07.முருகன் முறையீடு 08.வள்ளுவர் காட்டிய வழி 09.வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை  ஆகிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களாகும்.
*******************************
ஆனாலும், 23.1.1951 இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம்குறு நிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே தொடர்ந்தது. திருக்குறள் வகுப்புகள்  நடத்தியும்,  தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்து, வள்ளுவர் வழி நடந்த திருக்குறளார் வீ.முனிசாமி 1994ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். திருக்குறள் உள்ளவரை திருக்குறளார் வீ.முனிசாமியின் பெயரும் புகழும் நின்று நிலைக்கும்.

விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி வீராசாமி பிள்ளை வீரம்மாள்  தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். திருச்சியில்  உயர்நிலைப்  பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு  ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும்  நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப்  பொருத்தமாக இருக்குமாறும்  மக்களுக்குச்  சொல்லவேண்டும்  எனும் முயற்சியில்  ஈடுபட்டார்.

1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை  நூற்றுக்கால்  மண்டபத்தில்  தொடங்கிய திருக்குறள் பரப்பும் திருக்குறளாரின் பணி அரை நூற்றாண்டையும் கடந்தது. 1941 ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர்  நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப்பாவாணர்  உள்ளிட்ட தமிழறிஞர்கள்  பங்கேற்றனர்.  சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை  மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள்  அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார்  ஆகியோருடன்  இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார்  ஈடுபட்டார்.

திருக்குறளார் சொற்பொழிவு

தொடர்ந்து  சென்னையில்  இவர் முன்னின்று நடத்திய திருக்குறள்  மாநாட்டில்,  பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை,  சுப்பிரமணியப்பிள்ளை,  இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தந்தைபெரியார் 1948இல் சென்னை  ராயபுரத்தில் நடத்திய  திருக்குறள் மாநாட்டில்திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்,  கல்விக்கடல் சக்ரவர்த்திநயினார், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன்  பங்கேற்று திருக்குறளார் சொற்பொழிவாற்றினார்.

மிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார் திருக்குறளார்.  பாமரர்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையிலான அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பியது. இதனால், வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவி திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

பெரியார்,  பாரதிதாசன், ப.ஜீவானந்தம், காமராசர்,  டாக்டர் மு.வ.,கி.ஆ.பெ.விசுவநாதம், ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தரபாரதியார்குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதி,  உ.வே.சா., மகாவித்வான் தண்டபாணி தேசிகர்,  சுவாமி சகஜானந்தா, சுவாமி விபுலானந்த அடிகளார், சர்.பி.டி.இராசன்  சி.பா.ஆதித்தனார் கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்  உள்ளிட்ட  தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.

குறள் மலர் இதழ்

திருக்குறளாரின் பணியை "குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனிசாமி சொல் கொள்வது போதுமே" என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  1949-ம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார். மேலும், மும்பையிலும், கடல்கடந்து மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் "குறள் மலர்' இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். 

நாடாளுமன்ற  உறுப்பினராக 1952 முதல் 1957 வரை இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார் என்பது கூடுதல் சிறப்பு.

1981-ம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர்  எம்.ஜி.ஆர். அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு  தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.

உலகத்தமிழர்கள் வழங்கிய பட்டங்கள்

வள்ளுவர் வழிப்பயணம், வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப்பாதை, வள்ளுவர் பூங்கா, வள்ளுவரும் பரிமேலழகரும், திருக்குறள் இன்பம், வள்ளுவரைக்காணோம், திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை, வள்ளுவர் ஏன் எழுதினார், வள்ளுவர் காட்டிய வழி என 30 நூல்களைப் படைத்திருந்தாலும், உலகப்பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம், திருக்குறளாருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது. இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது என  தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத்தமிழர்களால் வழங்கப்பட்டன.

திருக்குறளார் இயற்றிய நூல்களில்  01. சிந்தனைக் களஞ்சியம் 02.திருக்குறள் அதிகார விளக்கம் 03.திருக்குறள் தெளிவுரை பதவுரைப்பதிப்பு 04.திருக்குறள்-காமத்துப்பால் பொழிப்புரை 05.திருக்குறளார் தெளிவுரை 06.திருக்குறளில் நகைச்சுவை 07.முருகன் முறையீடு 08.வள்ளுவர் காட்டிய வழி 09.வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை  ஆகிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களாகும்.

ஆனாலும், 23.1.1951 இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம்குறு நிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே தொடர்ந்தது. திருக்குறள் வகுப்புகள்  நடத்தியும்,  தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்து, வள்ளுவர் வழி நடந்த திருக்குறளார் வீ.முனிசாமி 1994ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். திருக்குறள் உள்ளவரை திருக்குறளார் வீ.முனிசாமியின் பெயரும் புகழும் நின்று நிலைக்கும்.

by Kumar   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.