LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் - டாக்டர் மு வரதராசன் பாரிநிலையம்

"திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் ".
டாக்டர் மு வரதராசன் அவர்கள் எழுதியது. பாரிநிலையம் புத்தக வெளியீடு .மொத்த பக்கங்கள் 426 .விலை ரூபாய் 180/- முதல்பதிப்பு 1948 .மறுபதிப்பு 2019.
டாக்டர் மு. வ.அவர்கள் தமிழ் உலகம் அறிந்த நல்லறிஞர் .இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் .அவரின் சீரிய தமிழ்த்தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும் .அவரை ஈடு இணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார் .
உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல்வராக அவர் திகழ்ந்தார் .மு. வ.என்ற செல்லப் பெயர் ஒலிக்காத தமிழ் இல்லங்களும் நல் உள்ளங்களும் இல்லை எனலாம்.
தமிழால் உயர்ந்தவர் ;தமிழ் மொழியால் உயர்ந்தவர் .அவர் அடையாத பதவிகளும் இல்லை ;பெறாத பரிசுகளும் இல்லை. பன்மொழிப் புலமை பெற்றவர் .உலகம் சுற்றிய முதல் தமிழ் பேராசிரியர் அவர். மனதால் கூட பிறருக்குத் தீங்கு எண்ணாமல் சான்றோர் ஆக வாழ்ந்தவர். கணக்கற்ற புத்தகங்கள் எழுதியவர்.
****
இந்தப் புத்தகத்திற்கு போற்றுதலுக்கு உரிய திருவிக அவர்கள் அணிந்துரை வழங்கி இருக்கிறார்கள் அதனால் காரணம் பற்றி இந்த நூலின் பெருமையை அறியலாம்.
தனது அணிந்துரையில் மதிப்புக்குரிய திருவிக அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் .:
திருவள்ளுவர் தமிழ் நாட்டில் பிறந்தவர்; இல்வாழ்க்கையில் நின்று ஒழுகியவர் என்பதும் மக்களை ஈன்றவர் என்பதும் தெய்வப்புலவர் என்பதும் அறிவோர் என்பதும் அவர் அருளிய நூலால் நீதி நூலால் இனிது விளங்கும்.
உலகுக்கு என்று ஒரு நூலை அளித்த ஒருவரை ஈன்ற பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு.
அன்பு வழி வாழ்க்கை வளர்தல் வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும் .பண்பும் பயனும் உடைய வாழ்க்கையே ஒரு கலை .அந்த வாழ்க்கை கலை அன்பை வளர்த்து உருக் கொள்வது என்பதை மறத்தலாகாது. வாழ்க்கை கலை யே மற்ற கலைகளின் தாயகம்.
திருவள்ளுவர் கலை முப்பாலால்ஆகியது. அவை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்பன. உலகம் ஒரு குலம் என்பதற்கு கால் கொள்ளும் இடம் காமத்துப்பால். அக்காலுக்கு உ ரமளிப்பது பொருட்பால் ;இரண்டையும் ஒழுங்கில்
இயக்கி காப்பது அறத்துப்பால் .மூன்றன் குறிக்கோளும் "உலகம் ஒரு குலமாதல்" வேண்டும் என்பதே .திருக்குறள் சுரங்கம் வற்றாதது.
திருக்குறளை பற்றிய ஆராய்ச்சிகள் புதுமை போர்வையில் இனி வருவது நல்லது .அந்த வகையில் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் இந்த நூல் புது உலக மணம் கமழ்கிறது.
காமத்துப்பால்.
ஒருவன் ஒருத்தி உடன் ஒருத்தி ஒருவன் உடன் வாழ்வதே காதல் வாழ்க்கை என்று காமத்துப்பால் வலியுறுத்துகிறது. திருவள்ளுவர் காமத்துப்பாலில் ஒருவன் ஒருத்தி காணப்படுகின்றனர் . இருவரையும் காதல் ஒருமைப் படுத்துகிறது.
பொருட்பால்.
திருவள்ளுவர் போரில் கொலை குறிப்பு இல்லை என்றும் ரத்தம் காணப்படவில்லை என்றும் அப்போர் மன்றப் போரை அதாவது கருத்து போரை நடத்துவது என்றும் ஆசிரியர் நெஞ்சம் நினைக்கிறது .அந்த நெஞ்சம் வாழி .
உ ழவு அதிகார புலத்தை தோழர் அறிவு உழுகிறது .உணர்வும் உழுகிறது புது உலகுக்குரிய தொழில் வண்ணமாக அவர் அறிவுக்கும் உணர்வுக்கும் பொருளாகிறது.
அறத்துப்பால்
அறத்துப்பால் ஆராய்ச்சியில் காமத்துப்பாலில் நுட் பமும் பொருட்பாலின் உள்ளுறையும் வட்டமிடுகின்றன. மனதில் மாசி இன்மை அதாவது மனத்தூய்மை எங்கனம் வருகிறது .யாண்டும் அகத்திணை மனோதத்துவம் தாண்டவம் புரிகிறது.
நூலின் பெற்றி .:
இந்த நூல் ஒரு நன்னூல். புதுமை பொது நூல். உலகம் ஒரு குலமாக துணை செய்யும் . இதனை உதவிய ஆசிரியர் வரதராஜன் வாழ்க .
காதல் ஓங்க, பொருள் பெறுக, அறம் வளர்க, புதுமைப் புது உலகம் பூக்க ;உலகம் ஒரு குலமாக .
" யாதும் ஊரே யாவரும் கேளிர்"- பூங்குன்றனார் என்று திரு வி கல்யாண சுந்தரம் அவர்கள் தனது அணிந்துரையில் வாழ்த்தி இருக்கிறார் இவ்வாறு.
****
தனது முன்னுரையில் டாக்டர் மு. வ. அவர்கள் கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்: திருக்குறள் இலக்கியமா க கற்று சொற்சுவை பொருட்சுவை முதலியன காணும் வகையில் நூல்கள் வெளிவந்துள்ளன .
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் .அவர் இன்றுள்ள வாழ்க்கையை எவ்வாறு விளக்க முடியும் என்று கேட்கலாம் .காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தில் மாறுதல்கள் உடையயின் மாறுதல்களை போன்றவை .அடிப்படை உண்மைகள் உயிர் போன்றவை. திருவள்ளுவரும் வாழ்க்கையின் அடிப்படையாகவும் பொதுவாகவும் உண்மைகளை கண்டு எழுதி உள்ளமையால் பல்வேறு காலத்தவரும் அவற்றை போற்ற முடிகின்றது.
நூல் இரு வகை :
தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று.நம் காலத்திற்கு தான் வந்து உதவுவது ஒன்று மற்றொன்று .
நூலை கற்கும் முறையும் இருவகை:
வாழும் காலத்தை மறந்து நூல் எழுதிய காலத்திற்கு கற்பனை செய்து கொண்டு பறந்து சென்று நூல் பொருளைக் கற்பது ஒருவகை .
நூல் எழுதிய காலம் எதுவாயினும் அதை விட்டு வாழும் காலத்திற்கே வந்து வழிகாட்டும் நூலை போற்றி கற்பது மற்றொரு வகை .
இரண்டாம் வகையைச் சார்ந்தது தான் திருக்குறள் .
இந்த நூல்களில் எழுதிய எழுத்துக்கள் மறைந்து நிற்க அறிவுறுத்தும் சான்றோர் முன் நிற்பர் .திருக்குறளை இவ்வகையாக போற்றி கற்கக் கற்க திருவள்ளுவர் என்னும் தமிழ்ச் சான்றோர் முன் வந்து வழிகாட்ட காண்கிறோம் .இதுபற்றியே திருக்குறளை திருவள்ளுவர் என்று
வழங்கும் வழக்கம் காணப்படுகின்றது.
பகவத் கீதையை பற்றி காந்தியடிகள் எழுதும்போது இந்த நூலை மூளைகொண்டு கற்காமல் இதயம் கொண்டு உணரவேண்டும் என்று குறித்துள்ளார் .திருக்குறளையும் அவ்வாறே ஓதி உணர வேண்டும்.
காதலும் பொருளும் வாழ்க்கை படிகள். அறமே வாழ்க்கையின் உயர்நிலை என்று விளக்கும் நோக்கத்தால் காமத்துப்பால் பொருட்பால் அறத்துப்பால் என்னும் முறையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது," என்பதாக டாக்டர் மு வரதராசன் அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்.
****
இனி திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் குறித்த புத்தகம் காண்போம்.
காமத்துப்பால் :
இன்று மக்கள் உடம்புகள் கோடிக்கணக்காக பெருகி உள்ளன. ஆனால் மக்கள் உணர்வு பெருகவில்லை. மக்களை போன்றோரின் தொகை பெருகி உள்ளதே ,ஒழிய மக்களாய் வாழ்வோர் தொகை பெருகவில்லை .அதனால்தான் உலகத்தில் குழப்பமும் கோளாறும் பூசலும் போரும் இன்றும் ஓயவில்லை .இன்பமும் அன்பும் அமைதியும் அறமும் இன்றும் அரும்பொருள்களாகவே உள்ளன.
ஒருவனும் ஒருத்தியும் ஆக வாழ்கின்ற வாழ்க்கையே இன்பம் பயக்க தக்கது ,காதல் முழுமைக்கும் சிறப்புடையதாக விளங்கும்.
காதலர் இருவர் இன்பமும் துன்பமும் உற்று ப் பண் படுவதே தனி கல்வியாகும். உணர்வும் அறிவும் பண்பட்டு ஒத்த வளர்ச்சி பெற்று நல்வாழ்வு வாழக்கூடிய வகையில் காதல் அவர்களுக்கு பயிற்சி தருகிறது.
இந்த பயிற்சி பெற்றால் தான் இல்வாழ்க்கை அன்பும் அறணும் உடைய வாழ்க்கையாக வளர்ந்து ஓங்க முடியும்.
காதலர் ஒருவருக்கு ஒருவர் வாழ்க்கைத் துணை அமைந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ முடியும் .அறிவார்ந்த மக்களைப் பெற்று தீயவை தீண்டாமல் வாழ முடியும்.
பிறர் துன்பம் உணர பயின்ற பயிற்சியால் தொடர்புடைய எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த முடியும். பிறகு உயிராக அன்பு வாழ்க்கை வாழ முடியும் .விருந்தோம்பி வேள்வி தலைப்பட முடியும் .இன்சொல் பயின்று செய் நன்றி மறவாமல் நடுநிலையை போற்றி அடக்கமும் ஒழுக்கமும் உடையவர்களாக வாழமுடியும் .
பிறன் இல் விழையாமல் அடையாமல் காத்துக்கொள்ள முடியும். பொறுமை பூண்டு பொறாமை அகற்றி பிறர்பொருள் கவராமல், புறங்கூறாமை பயனில சொல்லாமை தீவினையச்சம் ஒப்புரவறிதல் ஈகை உடையவராய் புகழ் பெற முடியும் .
அருள் உணர்வு வளர்ந்து புலால் மறுத்து தவம் மேற்கொண்டு போலி ஒழுக்கமும் துறந்து களவும் பொய்யும் வெகுளியும் இன்னா செய்தல் கொலையும் கடிந்து தூய வாழ்க்கை நடத்த முடியும். நிலையாமை அறிந்து ,துறவு நிலையில் நின்று மெய்யுணர்வு பெற்று , அவா அற்று,ஊழ்வழி உணர்ந்து ,ஒழுக முடியும்.
அதன் சிறப்பையும் பெருமையையும் அறிந்து அவற்றின் வாயிலாக கடவுளை உணர்ந்து வழிபட்டு நீடு வாழ முடியும்.
இவ்வளவுக்கும் காரணமாக இருப்பது காதல் கற்பிக்கும் பண்பாடே ஆகும் ;.மற்ற உயிரின் துன்பம் தன் துன்பம் போல் உணர்ந்து உருக செய்யும் பண்பாடு ஆகும்,"என்று காமத்துப்பால் குறித்து பல குறள்களை மேற்கோள்காட்டி ஆசிரியர் விளக்குகிறார்.
பொருட்பால்.:
காதலரின் அன்பு வாழ்க்கைக்கு பொருள் ஒரு சிறந்த கருவியாகும் .பொருள் இல்லாதவர்க்கு இந்த உலக வாழ்வு இல்லை என்பதைத் திருவள்ளுவர் அறத்து பாலிலும் நினைவூட்டுகிறார். பொருட்பாலிலும் பொருள் செயல்வகை என்ற அதிகாரத்தில் வலியுறுத்துகின்றார். அறத்துப்பாலில் அருளை சிறப்பிக்க வந்த இடத்தில் உவமையாக வைத்து பொருட் சிறப்பை கூறுகின்றார் .
பொருட்பாலில், அந்த அருளும் பொருளால் வளர்வது என்கின்றார் .அருள் என்னும் குழந்தையை அன்பு பெற்ற அந்த குழந்தையை பொருள் செவிலித் தாயாக இருந்து வளர்த்தால்தான் வரும் என்கிறார்.
அறத்துப்பால்.:
விதைத்தது விளையும் என்று உணரவேண்டும் ;விளையும் போது தாம் விதைத்தது இன்னது என்று உணர்ந்து திருந்த வேண்டும் .அதன் சிறப்பையும் ஊழின் வலியையும் உணர்ந்து தெளிய வேண்டும் .அவ்வாறு உணராமல் நன்மை விளையும் போது நல்லவை என்று உணர்கின்ற அவர்கள் ,தீமை விளையும் போது அல்லல் படுவது ஏன் .?
நன்னெறியால் நன்மையும்,தீ நெறியால் தீமையும் விளையுமாறு செய்யும் ஊழின் வலியை உணர்வதே கடமையாகும். ஊழை விட வலிமை மிக்கது எவை உள்ளன .அதை கடந்து போக முயன்று வேறொரு வழியை தேடினாலும் அப்போதும் அதுவே முன்வந்து ஆட்சி செய்யும் .ஆகவே அதன் வலிமையை உணர்ந்து அறநெறியை போற்றி வாழ்வதே கடமையாகும் என்று கூறுகிறார் இறுதியாக
டாக்டர் மு. வரதராசன் அவர்கள்.
*****
திருக்குறள் 1330 குறளையும் ஒருங்கே இந்த நூலில் படித்தது போல் தெளிவாகவும் அழகாகவும் வன்மையாகவும் மென்மையாகவும் டாக்டர் மு. வ அவர்கள் எடுத்து இயம்பிய விதம் போற்றுதலுக்கு உரியது .
குறளை வாழ்க்கையில் தினமும் கடைப்பிடித்து ஒழுகும் நல் இன்பம் காண்போம். வள்ளுவம் வாழ்க.
 
-திரு.நா.கருணாமூர்த்தி , (முகநூல் பதிவு )
by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள் மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள்
தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்! தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்!
வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.