LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- ஏன்? எப்படி?

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.


2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

 

நன்றி : சட்ட பஞ்சாயத்து 

by Swathi   on 05 Jan 2014  1 Comments
Tags: Arrest   During Arrest Rights   Rights   நீங்கள் கைது செய்யப்பட்டால்   உரிமை   பிடிப்பாணை   பிணை  
 தொடர்புடையவை-Related Articles
தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !! தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
அறிந்து கொள்ளுங்கள் உங்களின் அடிப்படை உரிமைகளை !! அறிந்து கொள்ளுங்கள் உங்களின் அடிப்படை உரிமைகளை !!
பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் ஒரு பார்வை !! பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் ஒரு பார்வை !!
பத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு - கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி - லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு - கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி - லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு
நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?
மனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10 மனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10
ஆரம்பம் திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கியது ஜெயாடிவி !! ஆரம்பம் திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கியது ஜெயாடிவி !!
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
கருத்துகள்
03-Nov-2016 13:28:19 kannan said : Report Abuse
வணக்கம் எங்களிடம் 3 சென்ட் இடம் உள்ளது கன்னியாகுமரி யில் உள்ள அஞ்சுகிராமம் என்கிற இடத்தில். நாங்கள் அதில் கடைகள் அமைக்க முடிவு செய்துள்ளோம். அதில் approval வாங்க நங்கள் என்ன செய்ய வேண்டும்.அது எங்கள் தாத்தா சொத்து பட்டா வும் உள்ளது. நாங்கள் வேரு சமுகத்தை சார்ந்ததுனால் அதை அவர்கள் தர மறுக்கிறார்கள். கண்ணன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.