மரல்களிலேயே மிகவும் சிறந்த தன்மை உடையது வாழை. இதில் எந்த பொருளும் வீண்போகாது. வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது. இதைப்
போன்றே,வேண்டும் அனைவருக்கும் உதவும் தெய்வம் என்பதால், கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று
விளங்குகிறார்.நீங்கள் விவசாயியாக இருந்தால், அடிக்கடி வயலிலும், தோட்டத்திலும் பாம்புகளை பார்க்கக் கூடும். பாம்பு பற்றிய பயத்தை தவிர்க்கவும்,
அவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் இத்தலம் வந்து தங்கி வாழைத் தோட்டத்து அய்யனை வழிபட்டுச் செல்லலாம்.சின்னையன் இறைவன் திருவடி
சேர்ந்தார். இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது.அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி
இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ்
வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும்
அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.
மரல்களிலேயே மிகவும் சிறந்த தன்மை உடையது வாழை. இதில் எந்த பொருளும் வீண்போகாது. வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது. இதைப் போன்றே,வேண்டும் அனைவருக்கும் உதவும் தெய்வம் என்பதால், கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். நீங்கள் விவசாயியாக இருந்தால், அடிக்கடி வயலிலும், தோட்டத்திலும் பாம்புகளை பார்க்கக் கூடும்.
பாம்பு பற்றிய பயத்தை தவிர்க்கவும், அவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் இத்தலம் வந்து தங்கி வாழைத் தோட்டத்து அய்யனை வழிபட்டுச் செல்லலாம். சின்னையன் இறைவன் திருவடி சேர்ந்தார். இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது. அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார்.
இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது. |