LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாடு அரசின் அரசு விழாக்கள், கோயில் நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகளில் தமிழ் இசை நிகழ்ச்சிகள் கட்டாயம் இடம் பெற வேண்டும். அதே போல பள்ளி, கல்லூரிகளில் தமிழ் இசைப் பாடம் இணைக்கப்பட வேண்டும் என, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழாய்வு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உலகத்தமிழாய்வு மாநாடு 2020 மற்றும் பேரூராதீனம், சிரவை ஆதீனம் மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை இணைந்து நடத்திய இசைத் தமிழ் ஆய்வரங்கம் ஆகியவை கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் கோவை கௌமார மடாலயத்தில் நடைபெற்றது.

பேரூராதீனம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையுரையாற்ற, சிரவை ஆதீனம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு குமரகுருபர அடிகளார் முன்னிலை வகிக்க, நேரடியாகவும், இணைய வழியாகவும் ஏராமான ஆய்வறிஞர்கள், உலக ஆன்றோர், சான்றோர் உரையாற்றினர்.

தமிழ் இசை மும்மூர்த்திகள் முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரின் திரு உருவப் படம் திறந்து வைக்கப்பட்டது.

இவர்கள் வரலாறு அடங்கிய இசை - முதல் மும்மூர்த்திகள் எனும் நூலும் வெளியிடப்பட்டது.

தமிழ் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இசைக் கருவிகள் கண்காட்சியும் நடைபெற்றன.

மாநாட்டின் இறுதியில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. தமிழ் மரபிசைக் கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் சலுகைக் கட்டணம், அரசு விடுதிகளில் சலுகை அளிக்கப்பட வேண்டும். ஓய்வூதியத் திட்டம் அறிவிக்க வேண்டும்.

2. தமிழ் இசை பற்றி ஆய்வு செய்வோருக்கு அரசு அங்கீகாரம், உதவிகள் அளிக்க வேண்டும். இசைத் தமிழ் ஆய்வுக்கென தனித் துறையை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

3. இசைக் கலையின் அனைத்து அம்சங்களையும் மீட்டெடுக்க வேண்டும்.

4. மக்கள் வழக்காட்டு இசையில்தான் தமிழ் உயிர் வாழ்கிறது. எனவே அந்த மக்கள் வழக்காட்டு இசையை மீட்டெடுத்து வலுப்படுத்தி, வளம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தமிழ் மரபிசைக் கருவிகளின் வடிவங்களை ஒழுங்குபடுத்தி, முறையாக உருவாக்கி மீட்டுருவாக்கம் செய்தல் வேன்டும்.

6. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் தமிழ் இசையை பக்தி இசைக்கு மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து இசை வடிவங்களிலும் பயன்படுத்த வேண்டும்.

7. ஓகக் கலையில் தமிழ் இசைப் பண் பயன்படுத்த வேண்டும்.

8. தமிழ் இசைக்கென / ஆய்வுக்கென அருங்காட்சியகம், தனி நூலகம் அமைக்க வேண்டும்.

9. இசைத் தமிழ் பாடத்திட்டம் உருவாக்கப் பட்டு உலகத் தமிழ் மாணவ மாணவியருக்குக் கற்றுத்தரப்பட வேண்டும்.

10. திருக்குறளை இசை வடிவில் கொண்டு வர வேண்டும்.

11. ஜெண்டை மேளத்திற்கு ஆண்டொன்றுக்கு ஒன்றரை லட்சம் கோடி பணம் தமிழ்நாட்டில் இருந்து அந்தக் கலைஞர்களுக்குச் செல்கிறது. ஆனால், தமிழ் இசைக் கலைஞர்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலை மாற்றி, தமிழ் இசைக் கலை உயிர்பெற அரசு ஆவண செய்ய வேண்டும்

எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புக்கு - 8012271745

by Swathi   on 23 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா”  -  வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.