LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.

அக்டோபர் 8, 2022 சனிக்கிழமை அன்று அமெரிக்கக் கிழக்கு நேரம் காலை 10 மணிக்கு "பண்ணிசை விழா 2022" என்ற தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.

இதற்கு ஒருங்கிணைப்பாளராக அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து திருமிகு. சம்மு இரவி அவர்கள் மிகச்சிறப்பாக பண்ணிசை சிறப்புகளைச் சொல்லி, பாடல்களைக் குறிப்பிட்டு தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி அவர்கள் வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினரர்களாக பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தி, நிகழ்ச்சி முழுதும் கலந்துகொண்டு அனைவரின் பாடல்களையும் கேட்டு வாழ்த்தி விடைபெற்றார். மேலும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் இசை பரதநாட்டியத்துறை தலைவர் பேராசிரியர் ஞானா குலேந்திரன் அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழிசை ஆய்வாளர் தமிழ்த்திரு ஏழிசைவாணர் நா. மம்மது அவர்கள் கலந்துகொண்டு பண்ணிசையின் சிறப்புகளைப் பட்டியலிட்டார். இலங்கையிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பணியாற்றும் திரு. கலாநிதி. தெ .பிரதீபன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் சிகாகோ, வெர்சீனியா, நியூஜெர்சி, டெஸ்காஸ், கலிபோர்னியா, மிசௌரி, அர்கன்சாஸ் ஆகிய பகுதிகளிலிருந்தும், கனடாவிலிருந்தும் பங்கேற்று பண்ணிசையை மிகச்சிறப்பாக பாடி வியப்பில் ஆழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்கமாக டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கம் அதன் தலைவர் திரு.வெற்றிச்செல்வன் தலைமையில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியை டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து திருமிகு. பிரவீனா வரதராஜன், வர்ஜினியாவிலிருந்து திரு. மதிவாணன் மற்றும் பலர் ஒருங்கிணைத்து உதவினர். பங்கேற்றுப் பாடிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முதல் ஆண்டாக வட அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள இந்த பண்ணிசை விழா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய சிந்தனைகளுடன் பண்ணிசை வளர்ச்சியை முன்வைத்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பண்ணிசைப் பயிற்சி நூல் ஒன்றை வலைத்தமிழ் தமிழிசைக் கல்விக்கழகம் பதிப்பித்து அதை சிறப்பு விருந்தினர் தவத்திரு பேரூர் ஆதினம் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார்கள்.

இந்நூல் வரும் டிசம்பர் மாதத்தில் மேலும் ஒரு பதியுடன் எட்டு நிலைகளாக அனைவருக்கும் கிடைக்கும் என்று வலைத்தமிழ் தமிழிசைக் கல்விக்கழகம் தெரிவித்துள்ளது.

 

by Swathi   on 14 Oct 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா”  -  வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.