LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை மற்றும்  வலைத்தமிழ் தமிழிசை  கல்விக்கழகம் ( www.ValaiTamilAcademy.org)  இணைந்து உலகம் முழுதும் தமிழிசையை  வளர்க்கப் பயிற்சிப்பட்டறை, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் அமெரிக்காவின் நிகழ்கலைக்கழகம் உருவாக்கியுள்ள முறைப்படுத்தப்பட்ட மூன்று ஆண்டு பாடத்திட்டத்தை  நேரிலும், இணையம் வழியாகவும் தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு வாய்ப்பாட்டு வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில் பல நாடுகளிலிருந்து  பெரியவர்களும் , சிறுவர்களும் இசையின் அடிப்படையையும், வாய்ப்பாட்டு நுணுக்கத்தையும்,  பக்தி  இலக்கிய -சங்க இலக்கியப் பாடல்களையும் தமிழிலேயே கற்றுவருகிறார்கள்.  அந்த வகையில் அடுத்த கட்டமாகத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழிசையை வளர்க்கவும், இசை ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தி ஆர்வத்தை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  அந்த வகையில்  அமெரிக்க வாழ் தமிழர் திரு. குழந்தைவேல் இராமசாமி அவர்கள் முயற்சியில்  முதல் மாவட்டமாக   நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசையைக் கொண்டுசெல்ல  சவகர் சிறுவர்  மன்றம் கலை பண்பாட்டுத் துறை மற்றும் மாவட்ட கல்வித்துறையுடன் இணைந்து ஒருநாள் பயிற்சிப்  பட்டறை நடத்தப்பட்டது. 
 
நாமக்கல்லில் 24.02.2020 அன்று நாமக்கல் மாவட்ட சவகர் சிறுவர்  மன்றம் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் 2000-ம் ஆண்டு முதல் நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகின்றது. சவகர் சிறுவர் மன்றம்  16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை திறமைகள் வெளிக்கொணரும் விதமாக யோகா, சிலம்பம், கராத்தே, கிராமிய நடனம், பரதநாட்டியம், ஓவியம், கைவினை, வாய்ப்பாடு போன்ற நுண்கலைகளில் வாரம் தோறும் சனி மாலை 4-6, ஞாயிறு 10-12 எனப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
 
சவகர் சிறுவர் மன்றத்தின் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு கா.மெகராஜ் இ.ஆ.ப., அவர்களும், செயலாளராக திரு. ப.ஹேமநாதன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை சேலம் மண்டலம் அவர்களும் உள்ளனர். இவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் திட்ட அலுவலர், மற்றும் நுண்கலை ஆசிரியர்கள்  நான்கு பேர் பணியாற்றி வருகின்றன;.
 
நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசையை வளர்க்கவேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின்  வழிகாட்டலில் நாமக்கல் பள்ளிக்  கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்  திரு. மு. ஆ. உதயகுமார் அவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் தமிழிசை கற்றுக்கொள்ளக்  கூடிய ஆர்வமுள்ள குழந்தைகளை 23.02.2020 சவகர்  சிறுவர் மன்றத்திற்கு வருகை தர ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்  பேரவையின்  மக்கள் தொடர்பு  ஒருங்கிணைப்பாளர் திரு. குழந்தைவேல் இராமசாமி அவர்கள் மற்றும்  திரு.பொற்செழியன் , வலைத்தமிழ் பன்னாட்டு இதழின் ஆசிரியர் திரு.ச.பார்த்தசாரதி போன்றோர் ; வழிகாட்டலில் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனரும், வலைத்தமிழ் தமிழிசை  கல்விக்கழகத்தின் முதல்வருமான  திருபுவனம் குரு .ஆத்மநாதன் அவர்கள் வருகை தந்து குழந்தைகளுக்குத் தமிழிசையின் முக்கியத்துவம் குறித்தும், தமிழிசை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குழந்தைகள் மனதைப் பண்படுத்தவும், ஞாபக சக்தி கூடவும், ஆயுள் கூடும் மூச்சுப் பயிற்சி தான் தமிழிசை என விளக்கமாகக் குழந்தைகளிடம் பேசி வகுப்புகளை எடுத்தார்.  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு திரு.ஆத்மநாதன் ஐயா பாட உடன் பாடிக் கற்றுக்கொண்டனர்;. மேலும் அமெரிக்காவில் நிகழ்கலைக்  கழகம்  உருவாக்கியுள்ள தமிழிசை பாடத்திட்ட  நூலை  வழங்கினார். மேலும் இணையம் மூலம் வகுப்புகளில் தொடர்ந்து  கற்றுக் கொள்ளலாம் என அறிவுரை வழங்கினார்.
 
விழாவில் நாமக்கல் கம்பன் கழகத்தலைவர்  திரு.வ.சத்தியமூர்த்தி, நாமக்கல் தமிழ்ச்சங்கத் தலைவர் மருத்துவர் திரு.குழந்தைவேல், திருக்குறள் பேரவைத் தலைவர்  திரு.தேனருவி சுப்பிரமணியன், நாமக்கல், கவிஞர்  சிந்தனைப்  பேரவைத் தலைவர்  திரு.டி.எம்.மோகன், திரு.திருக்குறள் இராசா, கோட்டை நகரவை பள்ளி தலைமையாசியை  திருமதி.மரகதம், மனவளக்கலை மன்றச்  செயலாளர் திரு.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
 
விழாவினை பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலா; திரு.மு.ஆ. உதயகுமார்  அவர்கள் பயிற்சி வகுப்பைத் துவக்கிவைத்தார். இது ஒரு முதல் முயற்சியாகப் பள்ளிக் கல்வித்துறை  மற்றும் கலைப்பண்பாட்டுத்துறை, தமிழ் இலக்கிய அமைப்புகள் இணைந்து தமிழிசை பயிற்சியை உலகெங்கும் சென்று தமிழிசையைப் பரப்பிவரும் திரு.ஆத்மநாதன் ஐயா போன்ற பெரிய  ஆளுமைகளை வைத்துத் துவக்கியுள்ளோம். இது ஒரு தொடக்கம் தான் எந்த ஒரு செயலுக்கும் ஆரம்பம் ஒரு புள்ளி தான் அந்த அளவில் நல்ல துவக்கத்தை ஆரம்பித்துள்ளோம். வரும் காலங்களில் பள்ளிக்கல்வித்துறை, கலைப்பண்பாட்டுத்துறை, இலக்கிய தமிழ் அமைப்புகளோடு இணைந்து தமிழிசையை மாணவ-மாணவிகள் கற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும், மேலும் மாவட்டத்தில் பள்ளிகளில் தமிழிசை அறிமுக வகுப்புகள் உள்ளதால், அவற்றை நடத்தும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தத் திட்டமிடப்பட்டது.  
 
வரவேற்புரையாற்றிய சவகர்  சிறுவர்  மன்ற திட்ட அலுவலர்  திரு.மா.தில்லை சிவக்குமார்  அவர்கள்  வரும் காலங்களில் சவகர் சிறுவர் மன்றம் மூலம் தமிழிசையைப் பரப்பத் தொடர்ந்து வழிவகை செய்யப்படும் எனக்  கூறினார். இறுதியாக பரதநாட்டிய ஆசிரியர்  கங்கா ஸ்ரீதரன் நன்றியுரை ஆற்றினார். 
 
நாமக்கல் மாவட்டத்தைத் தொடர்ந்து தமிழிசையை அனைத்து மாவட்டத்திலும் கொண்டுசெல்ல வெளிநாட்டு வாழ் தமிழர்களும், அனைத்து மாவட்ட சவகர் சிறுவர்  மன்றம் கலை பண்பாட்டுத் துறை, மாவட்ட பள்ளிக்  கல்வித்துறை , தமிழ்ச்சங்கங்கள், தமிழார்வலர்கள், தமிழிசை பாடகர்கள், ஆசிரியர்கள்  முன்வரவேண்டும் என்றும் வீடுகளில் குழந்தைகளுக்குத் தமிழிசையை கற்றுத்தேர்ந்து அரங்கேற்றம் செய்து இசை ஆர்வத்தை வளர்க்கப் பெற்றோர்கள் முன்வரவேண்டும் என்றும் இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.  
 
நாமக்கல் மாவட்டத்திற்கு திரு.குழந்தைவேல் இராமசாமி போன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வெளிநாட்டு வாழ் தமிழர் தங்கள் மாவட்ட மாணவர்களுக்கு தமிழிசை பயிற்சிப் பட்டறை வேண்டும் என்று முன்வந்தால் தமிழிசை வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் Music@ValaiTamilAcademy.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.
by Swathi   on 28 Feb 2020  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்    -டாக்டர் நா. கணேசன் தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்    -டாக்டர் நா. கணேசன்
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
கருத்துகள்
28-Feb-2020 16:51:14 வெற்றிச்செழியன் said : Report Abuse
நல்ல முயற்சி. தமிழிசை மீட்பு நகர்வில் ஒரு நம்பிக்கையானத் தொடக்கம். ஒவ்வொருவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம். வெற்றிச்செழியன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.