|
||||||||
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா |
||||||||
இன்னிசையேந்தல் திருபுவனம் குரு.ஆத்மநாதன் நடத்தும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 19-ம் ஆண்டு மார்கழி இசைவிழா. இன்று தொடங்கி (டிசம்பர் 25, 2023) - வரும் 29ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.
தமிழிசையில் நடக்கும் தனித்துவமான நிகழ்வு இது. நுழைவுக்கட்டணம் இல்லாமல் , புரவாளர்களைக்கொண்டு இலவச உணவு வழங்கி இசை நிகழ்ச்சி நடப்பது இது ஒன்றுதான்..
வாய்ப்புள்ளவர்கள் நேரில் உங்களுக்கு உகந்த நாட்களில் கலந்துகொள்ளவும். வெளிநாட்டில் உள்ளவர்கள் உங்கள் பெற்றோர்களை , உறவினர்களைக் கலந்துகொள்ளப் பகிரவும்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை
பல்வேறு ஆளுமைகள் ஒவ்வொரு நாளும் கலந்துகொள்கிறார்கள்.
வலைத்தமிழ் தமிழிசைக் கல்விக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு பாடுகிறார்கள்.
தொடக்கவிழாவான 25 மற்றும் , 28ம் தேதியும் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி பங்கேற்றார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இணைந்து வழங்கும் 11ஆம் ஆண்டு தமிழிசை விழா 29ம் தேதி நடைபெற்றது. |
||||||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|