|
|||||
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் |
|||||
தமிழிசையை மக்களின் நம்பிக்கைகளின் வழியே கற்றுத்தரும் சிந்தனையில் "வலைத்தமிழ் கல்விக்கழகம் " துறைசார்ந்த அறிஞர்களைக் கொண்டு பாடத்திட்டம் அமைத்து , அந்தந்த துறையில் ஆர்வமும் , அனுபவமும் , நம்பிக்கையும் உடைய இசை ஆசிரியர்களை அடையாளம் கண்டு தமிழிசைப் பயிற்சியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அவர்களின் நேரத்திற்கு ஏற்ப நடத்துகிறது.
ஐந்து பகுதிகளாக தமிழிசை வகுப்புகள்
தமிழிசை வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களின் பங்களிப்பு அளப்பரியது. அதையும் உள்வாங்கி கீழ்காணும் ஐந்து பகுதிகளாக தமிழிசை வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதுவரை முடிக்கப்பட்ட பயிற்சிக் கையேடுகள்(வகுப்புகள் நடந்துவருகிறது ) 1. தமிழிசைப் பாடநூல் (செவ்வியல் இசை ,Carnatic ) (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கவிஞர்களுடைய பாடல்கள்-எம்மதமும், எந்த நம்பிக்கை உடையவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ) - இரண்டு பாகங்கள் (8 நிலைகள் ) 2. வள்ளலார் பாடல்கள் - பயிற்சிக் கையேடு 3. பண்ணிசைப் பாடல்கள் - பயிற்சிக் கையேடு
ஆசிரியர் தேவை.
தமிழிசையில் பாடத்திட்டம் உருவாக்கம் நடந்து வரும் இரு துறைகள்: 1. வைணவம் - ஆசிரியர் தயார். 2. திருப்புகழ் மற்றும் அம்மன் பாடல்கள் - ஆசிரியர் தேவை.
தமிழிசை கற்க ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்ய: www.ValaiTamilAcademy.org |
|||||
by Kumar on 14 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|