|
||||||||
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா) |
||||||||
![]() பாடல் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா) எழுதியவர் : வள்ளலார் (திருவருட்பா) இராகம் : தாளம் : குரல் : திருபுவனம் குரு.ஆத்மநாதன்
பாடல் வரிகள்: எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ. வஞ்ச வினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே. (எனக்கும் உனக்கும்) இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே. (எனக்கும் உனக்கும்) |
||||||||
by Swathi on 24 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|