LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி (Chettinad Mutton Biryani)

தேவையானவை :


சீரக சம்பா அரிசி - 3 கப்,

மட்டன் - 1/2 கி,

பெரிய வெங்காயம் - 4,

சின்ன வெங்காயம் - 15,

மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,

கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,

இஞ்சி - 50 கிராம்,

பூண்டு - 25 பல்,

பட்டை - 4 துண்டு,

ஜாதிக்காய் - பாதி,

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 4,

கிராம்பு - 4,

எலுமிச்சம்பழம் - பாதி பழம்,

ஏலக்காய் - 4,

மல்லி - 1 கட்டு,

நெய் - 1/2 கப்,

எண்ணெய் - 1/2 கப்.

தேங்காய் - 1 மூடி,

முந்திரி - 10,

தயிர் - 1/2 கப்,

புதினா - 1 கட்டு,


தாளிக்கத் தேவையானவை :


கிராம்பு - 3,

பட்டை - 3 சிறிய துண்டு,

ஏலக்காய் - 3,

பிரிஞ்சி இலை - 1,

சோம்பு - 1 டீஸ்பூன்.


செய்முறை :


1.குக்கரில் மட்டன்,1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் வரை வேகவைக்கவும்.பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.

2.இஞ்சி, துருவிய தேங்காய், முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு கப் பால் எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.

3.வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.2 நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள்போட்டு வதக்கவும்.5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.

4.ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைத்து அனலில் 15 நிமிடம் வைக்கவும்.

Chettinad Mutton Briyani

Ingredients for Chettinad Mutton Briyani:

 

Seeraka Samba Rice-3 Cup,

Mutton-1/2 Kg,

Large Onioon-4,

Small onion-15,

Chilly Powder-1/2 Tsp,

Garam Masala-1/4 Tsp,

Ginger-50 G,

Garlic-25 flakes,

Cinnamon-4 Pieces,

Nutmeg-Half,

Tomato-3,

Green Chilly-4,

Cloves-4,

Lemon Juice-Half,

Cardamom-4,

Coriander-1 Bunch,

Ghee-1/2 cup,

Oil-1/2 Cup,

Coconut-1 cup,

Cashew Nuts-10,

Curd-1/2 Cup,

Mint-1 Bunch.

 

Ingredients for Tempering:

 

Cloves-3,

Cinnamon-3 Pieces,

Cardamom-3,

Bay Leaf-1,

Fennel-1 Tsp.

 

Procedure to make Chettinad Mutton Briyani:

 

1. In a cooker, add mutton, 1/4 cup of curd, 1/2 tsp of turmeric powder, salt and allow 5 whistles to boil. Fry the cinnamon, cloves, cardamom and nutmeg in ghee and then grind them well. Chop the large onion and small onion. Peel the green chilies. Grind the garlic separetely.

2. Grind ginger, grated coconut and cashew nuts along with water and take 1 cup of coconut milk. Put the vessel on flame, add ghee, oil, cinnamon, cloves, cardamom, fennel, bay leaf and let to splutter. Then add chopped onion and green chilies.

3. Then add ground garlic and saute well. Add ground cinnamon, cloves, cardamom and nutmeg paste. When oil floats on top, add tomato. Now add curd. Then add coconuut milk, boiled mutton water and 6 cup of water. Add salt, mint and coriander leaves.

4. When starts boiling, add rice. When briyani is half cooked, add lemon juice. Cover the vessel and allow medium flame for 15 minutes.

 

 

 

 

by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.