LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

ஆட்டுக்குடல் குழம்பு (Goat Intestine Curry)

தேவையானவை :


சுத்தம் செய்த குடல் - 1

பெரிய வெங்காயம் - 1/2 கப் (பொடித்தது)

தக்காளி - 3 (பொடித்தது)

மிளகாய் தூள் - 3/4 டீஸ் ஸ்பூன்

மல்லி தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்

சோம்பு,சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன்

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு- 4 பல்

சின்ன வெங்காயம் - 4

தேங்காய்துருவல் - 1/2 கப்

புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

பட்டை - 2 துண்டு

லவங்கம் - 2

ஏலம் - 1

சோம்பு - சிறிதளவு

நல்லஎண்ணெய் - 50 மி .லி


செய்முறை:


1.முதலில் இஞ்சி,பூண்டு,சின்ன வெங்காயம்,தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும்.அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,லவங்கம்,ஏலம் போட்டு தாளித்து பொடித்த பெரிய வெங்காயம்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது,மிளகாய்,மல்லி,சோம்பு,சீரக பொடிகளை சேர்த்து வதக்கவும்.


2.ஒரு பாத்திரத்தில் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்க்கவும்.தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது.குக்கரில் 11 விசில் அடித்தவுடன் இறக்கவும்.சுவையான மணமான குடல் குழம்பு ரெடி!

Goat Intestine Curry

Ingredients for Goat Intestine Curry:

 

Washed Goat Intestine-1

Large Onion-1/2 Cup (Chopped)

Tomato-3 (Chopped)

Chilly Powder-3/4 Tsp

Coriander Powder-1/2 Tsp

Fennel, cumin Powder-1 Tsp

Ginger-small Piece

Garlic-4 Flakes

Small Onion-4

Grated Coconut-1/2 Cup

Tamarind-Large Lemon Size

Salt-as  Needed

Cinnamon-2 Pieces

Cloves-2

Cardamom-1

Fennel-Little

Sesame Oil-50 ml

 

Procedure to make Goat Intestine Curry:

 

1. Grind ginger, garlic, small onion and coconut very finely. Heat oil in a cooker, add cinnamon, fennel, cloves, cardamom and let to splutter. Then add onion, tomato, curry leaves and saute well. Then add ginger, garlic paste, chilly, coriander, fennel, cumin powder and fry well.

2. In a vessel, mix tamarind juice along with salt and washed goat intestine. Do not add too much water. Allow 11 whistles and remove from flame. Tasty goat intestine curry is ready.

 

 

by sruthi   on 15 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.