LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

ஆட்டுக்கால் பாயா (Goat Leg Paya)

தேவையானவை :


ஆட்டுக்கால் - 8

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2 (பெரியது)

மஞ்சள் பொடி - 1/4 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை , கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ் ஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ் ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ் ஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ் ஸ்பூன்

மல்லித்தூள் - 3 டீஸ் ஸ்பூன்

மைதா - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பச்சை மிளகாய் - 2

தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 8



செய்முறை :


1.முதலில் தக்காளி, வெங்காயம்,மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஆட்டுக்காலை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.


2.குக்கரில் ஆட்டுக்காலை போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.


3.கலவை கொதி வந்த பின்பு குக்கரை மூடி  மூன்று விசில் வந்த பின்பு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும்.ஆட்டு கால் வெந்தவுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.4.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி சால்னாவில் சேர்க்கவும்.சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி.

Goat Leg Paya

Ingredients for Goat Leg Paya:

 

Goat Leg-8

Large Onion-2

Tomato-2 (Large)

Turmeric Powder-1/4 Tsp

Oil-2 Tbsp

Coriander Leaves-Little

Ginger, Garlic Paste-2 Tsp

Garam Masala-1/4 Tsp

Pepper Powder-1/4 Tsp

Cumin Powder-1 Tsp

Coriander Powder-3 Tsp

Maida-2 Tbsp

Salt-as Needed

Green Chilies-2

Grated Coconut-4 Tbsp

Cashew Nuts-8

 

Procedure to make Goat Leg Paya:

 

1. Chop the tomatoes, onion and coriander leaves and then grind them along with grated coconut and cashew nuts very finely. Wash and clean the goat legs. Mix the goat legs together with maida flour along with salt and let to soak for a while.

2. In a cooker, add goat legs, onion, tomato, coriander leaves, masala power, ginger, garlic paste, green chilies and water. Let to boil well.

3. Cover the cooker and allow 3 whistles. Allow medium flame for 1 hour to boil well. Then add ground coconut and cashew nuts paste. Let the medium flame for 1/2 hour.

4. Heat oil in a pan, add small onion, curry leaves and fry till get color and add into salna. Tasty goat leg paya is ready.

by sruthi   on 15 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.