|
||||||||
இசைக்கடலின் (சங்கீத் சாகர்) எழுச்சியும் வளர்ச்சியும் |
||||||||
இசைக்கடலின் (சங்கீத் சாகர்) எழுச்சியும் வளர்ச்சியும் திரு.தியானேஸ்வரன் முன்னாள் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அரசு உலகில் ஏழு கடல்கள்தானே உண்டு. இதுவென்ன புதிதாக இசைக் கடல் என்று விபரமறிந்தவர்கள் கேட்கலாம். நெருப்புக் கோளாயிருந்த இவ்வுலகு, பரிமாண அடிப்படையில் -குளிர்ந்து இன்னுயிர்கள் வாழும் இயல்பு நிலைக்கு வந்தபோது, இயற்கையால் உருவானவை அக்கடல்கள் யாவும் இசையையே ஆத்மாவாகக் கொண்டு சுத்தநாதம் எழுப்பும், பரப்பும் ஒரு இசைவல்லு நரால் உருவானது இந்த இசைக்கடல். அந்தக்கடலுக்கு எல்லையுண்டு. ஆனால் எல்லை கடந்து, அந்த ஏழு கடலையும் தாண்டி, வியாபித்தி ருப்பது இந்த இசைக்கடல். யாரந்த இசைவல்லுநர் என்றறிய சற்று பின்னோக்கிப் போக வேண்டும். 1989&90ல் இந்திய பல்கலைக் கழகங்களுக் கிடையேயான ‘‘இளை ஞர் திருவிழா’’போட்டிகள், திண்டுக் கல் காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றபோது இளைஞர் நலத்துறை மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்துவந்த எனக்கு, சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற ‘‘நவீன நந்தனார்’’ நாடகத்தில் நந்தனாராக நடித்த இளைஞர் எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச்சிறப்பாக நடித்தார். முற்போக்கு கொள்கையுடைய அந்த நாடகத்தில் நந்தனாராகவே மாறி, அவ்விளைஞர் பொழித்த இசைமழை எல்லோரையும் மிக்கவியப்பில் ஆழ்த்தி, மகிழ்ச்சியில் நனையவைத்ததென்றால் அதுமிகையல்ல. மனந்திறந்து நான் அந்த இளைஞரை பாராட்டிப் பேசியபோது அந்த இளைஞரை பாராட்டிப்பேசியபோது அரங்கமே கரவெலியால் அதிர்ந்தது, அவரது திறமைக்கு சாட்சி. பத்து ஆண்டுகள் கழித்து அந்தஇளைஞர் டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா கூடைப்பந்து உள்ளரங்கில், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவராக இருந்த என்னை சந்தித்தபோது, பறையலி இசையில்பாடி பரவசமூட்டிய அந்த நவீன நந்தனார், மனக்கண்ணில் மங்காது இருந்த நினைவை புதுப்பித்து, நிஜக்கண்ணிற்கும் காட்சி தந்தார். அவர்தான் திருபுவனம் ஆத்ம நாதன், அன்று இசைமழை பொழிந்த இந்த நந்தன், என் முன் வைத்த கோரிக்கை, இயைந்தோர் இணைந்து அவர் மூலம் உருவான இசைக் கடலுக்கு (சங்கீத் சாகர்) இயங்க இறும்பூதுடன் உடனே அனுமதியளித்தேன். இசைக்கடல் என்கிற சங்கீத சாகர் 2000 மாவது ஆண்டில், திருபு வனம் ஆத்மநாதன் அவர்களால் அவர்தம் மாணவி ரூபாராஜ் துணையுடன் இப்படித்தான் துவங்கப்பட்டது. இசைக்கலைஞர்கள், திருவை யாறு சங்கீத ஆராதனையில் பங்கேற் பது அவர்தம் வாழ்க்கை குறிக்கோள். திருவையாற்றுக்கு அருகே உள்ளே திருபுவனத்தில் பிறந்த ஆத்மநாபன் இசைக்கடல் உருவாக்கிய பெருமை, அவர் தந்தை அமரர் குருமூர்த்தி அவர்களையே சாரும். தஞ்சையின் பெரும் சங்கீத வித்வான்களில் ஒருவரான கலைமாமணி பண்டிதர் போழக்குடி கணேச அய்யர், இசை குருக்குலத்தில் இவரை இணைத்து, அவர்தம் புகழ்வாய்ந்த சீடர்களில், முன்னோடியாக ஆத்மநாதனை உருவாக்கியவர் அவரே. அயல்நாடுகள் பலவற்றிலும் தன் இசைப்புகழ் கொடியை நாட்டிய, பல்வேறு நாடுகளில் இளைஞர்களை சீடர்களாக ஏற்று, பயிற்சி அளித்து வரும் திரு.ஆத்மநாபன், இசைக்கடல் (சங்கீத் சாகர்) பண்பாட்டு அறக் கட்டளையை 2005&ம் ஆண்டு நிறுவி, மார்கழி (டிசம்பர்) இசை விழாவை, மற்ற பாரம்பரிய சங்கீத சபாக்களுக்கு இணையாக சென்னையில் நடைபெறவிருப்பது இன்னுமொரு சிறப்பு. இசையையே ஆத்மனாக கொண்டு இயங்கும் இந்த நாதனுக்கு, வருங்காலத்தில் பெரும் அரசு சிறப்புகளும், பட்டங்களும் தேடிவரும், அதற்கு அச்சாரமாக 10&ஆம் ஆண்டு விழா சிறப்பாக அமை யும் என்பது திண்ணம். அதுவே என் இதய எண்ணம். |
||||||||
by Swathi on 28 Jan 2016 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|