LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

நாஞ்சில் மீன் குழம்பு (Najil Fish Curry)

தேவையானவை :


மீன் - 6 துண்டுகள்

புளி - சின்ன எலுமிச்சம் பழ அளவு


வறுத்து அரைக்க தேவையானவை :


தேங்காய் துருவல் - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1

மல்லி விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

பெருஞ்சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு பிடி


தாளிக்க தேவையானவை :


எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்


செய்முறை:


1.புளியை தண்ணீரில் ஊறவைத்து புளிதண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.அதனுடன் ஒரு கொத்து  கறிவேப்பிலை மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை நீள வாக்கில் நறுக்கி சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.

2.பெருஞ்சீரகம்,மல்லி ,மிளகு,காய்ந்த மிளகாய், இரண்டு நெட்டு கறிவேப்பிலை இவற்றுடன் ஒரு பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.தேங்காயை சிறு துருவல்களாக துருவி எடுத்துக் கொள்ளவும்.

3.வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலையும் இதர பொருட்களையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.தேங்காய் நன்கு பொன்னிறமாக பொலபொலவென ஆகும் வரை வறுக்க வேண்டும்.இதை 5 நிமிடங்கள் ஆற வைத்து பின் மிக்ஸியில் இட்டு நீர் விடாமல் நன்கு பொடித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அரை கப் நீர் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.

4.கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து அரை கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை இட்டு தாளித்துக் கொள்ளவும்.வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக்கலவையை ஊற்றவும்.குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும்.மூடியை சிறிது திறந்திருக்குமாறு மூடி 10 நிமிடங்கள் சிமிழில் வேக விடவும்.

Najil Fish Curry

Ingredients for Najil Fish Curry:

 

Fish-6 Pieces

Tamarind-Small Lemon Size

 

Ingredients for Fry and Grind:

 

Grated Coconut-1/4 Cup

Large Onion-1

Coriander Seeds-3 Tbsp

Dry Chilly-10

Fennel-1 Tbsp

Pepper-1 Tsp

Curry Leaves-Hand Pinch

 

Ingredients for Tempering:

 

Oil-1 Tbsp

Fenugreek-1 Tbsp

 

Procedure to make Najil Fish Curry:

 

1. Soak tamarind in water and extract the juice. Then mix the 1 bunch of curry leaves and 2 green chilies together with tamarind juice.

2. Take the Fennel, coriander, pepper, dry chilly, curry leaves, large onion and keep aside. Take the grated coconut from coconut.

3. Heat 1/2 spoon of oil in a pan, add grated coconut and given ingredients and fry till coconut get golden color. Then allow to cool for 5 minutes and grind them finely along with water.

4. Mix the ground paste together with tamarind juice along with salt. Heat oil in a pan, add fenugreek and fry for a while. Then pour the tamarind mixure. When the curry starts boiling, add fish pieces. Cover the pan and 10 minutes to boil.

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.