|
||||||||
நல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் |
||||||||
நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள் (நல்ல) சொல்லி அழைக்கும்போதே இனஉணர்வு ஊட்டுங்கள் சுவைத்தேன் தமிழிசை யாழினை மீட்டுங்கள் (நல்ல) தாய்ப்பாலுடன் தமிழ் பாலையே புகட்டுங்கள் தமிழச்சி பெற்ற பிள்ளை இவளெனக் காட்டுங்கள் வாயினிக்க தமிழ் பெயரிட்டே அழையுங்கள் வரலாறு படைத்த தமிழ் கல்வியை அளியுங்கள் (நல்ல) பிறமொழி கலப்பட பேச்சை கைவிடுங்கள் பிழையின்றி தமிழையே பேசி பழகுங்கள் அறநூள் திருக்குறளை படித்திட செய்யுங்கள் அறிவுள்ள பிள்ளையாக்கி அவையின் முன் வையுங்கள் (நல்ல) மம்மி டாடி என்று சொல்லிக் கொடுக்காதீர் மழலை மொழி அமுதில் நஞ்சை கலக்காதீர் அம்மா.. அம்மா எனும் உயர்ந்த சொல்லை மறக்காதீர் அன்னை தமிழ் மொழிக்கு கேடு விளைக்காதீர்... (நல்ல) |
||||||||
by Swathi on 22 Jul 2018 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|