|
||||||||||||||||||
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipalayam Chicken) |
||||||||||||||||||
தேவையானவை : சிக்கன் - 1 கிலோ சின்னவெங்காயம் - கால் கிலோ எண்ணெய் - 6 ஸ்பூன் வரமிளகாய் - 10 (விதைகள் எடுக்கப்பட்டது) கறிவேப்பில்லை - 6 இலை தேங்காய் துருவல் - 1 கப் கொத்தமல்லி - 6 இலை சிக்கன் மசாலா - 50 கிராம் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு செய்முறை : 1.சுத்தமாக தண்ணீரில் சிக்கனை அலாசி தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு பொறிய விடவேண்டும். பின் கறிவேப்பிலை,வரமிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும். 2.இதனுடன் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும் வதக்கும் போது மஞ்சள் தூள் கொஞ்சம் சிக்கன் மசாலா துளை போட்டு கொஞசம் தண்ணீர் தெளித்து வேக விடவேண்டும் சிக்கன் வேகும் போது கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 3.உப்பு தேவையான அளவு போட்டு விட்டு 20 நிமிடம் கழித்து நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு கிளற வேண்டும். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சிக்கனை வேக விடவேண்டும். 4.சிக்கன் வெந்துவிட்டதா என ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு பாருங்கள் வெந்த உடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி வைத்து பரிமாற ஆரம்பிக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|