|
||||||||
பனிவரகு காளான் சாதம் |
||||||||
தேவையானவை : 1. பனிவரகு - 1 கப் 2. நறுக்கிய காளான் - 1/2 கப் 3. கடலை எண்ணெய் – 3 மேசை கரண்டி 4. ஏலக்காய் - 2 5. பட்டை – சிறிது 6. கிராம்பு - 2 7. ஜாதிக்காய், ஜாதிபத்திரி - சிறிது 8. பட்டை, சோம்பு(பொடித்தது) - 2 தேக்கரண்டி 9. இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி 10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 11. மஞ்சள்தூள் - சிறிது 12. வெங்காயம் - 1/4 கப் 13. தக்காளி - 1/4 கப் 14. புதினா - 1 கைப்பிடி 15. தேங்காய்பால் - 1/4 கப் செய்முறை : 1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதை சூடாக்கி பட்டை, ஏலக்காய், கிராம்பு, பட்டை சோம்புப் பொடி, இஞ்சி பூண்டு விழுது முறையே சேர்த்து நன்றாக வதக்கவும். 2. மேலும் அதனுடன் புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். 3. இதனுடன் கழுவிய காளான், கழுவிக் கல்லரித்த பனிவரகு அரிசி, 2 கப் நீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். 4. தண்ணீரும், அரிசியும் ஒரே மட்டத்திற்கு வரும்போது தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து பிறகு பரிமாறவும். |
||||||||
by Swathi on 07 Aug 2014 0 Comments | ||||||||
Tags: Panivaragu Recipes Kalan Recipes பனிவரகு சமையல் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|